’நடிகையர் திலகம்’, ‘பெண்குயின்’ ஆகியப் படங்களை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் கதாநாயகியை மையப்படுத்திய படம் ‘சகி’. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் முழுக்க முழுக்க பெண்கள் நிறைந்த குழுவால் எடுக்கப்பட்டுள்ளது.
நாகேஷ் குக்குனூர் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு இணை தயாரிப்பாளராக ஷ்ராவ்யா வர்மா பணியாற்றியுள்ளார்.
பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு வழங்கும் இந்தத் திரைப்படத்தை வொர்த் எ ஷாட் மோஷன் ஆர்ட்ஸ் பேனர் நிறுவனத்தின் கீழ் சுதீர் சந்திர பதிரி தயாரித்துள்ளார்.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு இப்படத்தின் டீசர் நாளை காலை 10 மணிக்கு வெளியாக உள்ளது. இதற்காக அறிவிப்பும், படத்தின் போஸ்டரும் வெளியாகியுள்ளது. இதில் உற்சாகமாக நடனம் ஆடும் கிராமத்து பெண்ணாக கீர்த்தி சுரேஷ் இருக்கும் புகைப்படம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

விளையாட்டு, காதல், நகைச்சுவைப் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆதி பினிஷெட்டி மற்றும் ஜகபதி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கீர்த்தி சுரேஷ் துப்பாக்கிச் சூடு வீராங்கனையாக நடிக்கிறார்.
ராக் ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் படத்துக்கு இசையமைக்க சிரந்தன் தாஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு மீதம் இருக்க, படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு வேலைகள் முடிந்துவிட்டன. இறுதிகட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...