சினிமா பிரபலங்களின் திருமண வாழ்க்கை நிலையில்லாத ஒன்றாகிவிட்டது. சிலர் திருமணமாகி ஒருவருடத்துக்குள் விவாகரத்து செய்துவிட, சிலரோ பிள்ளைகள் பெரியவர்களான நிலையிலும் விவாகரத்து பெற்றுவிடுகிறார்கள். அந்த வகையில், பிரபல நடிகை ஒருவர் தனது கணவரை விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.
பாலிவுட் சினிமாவை சேர்ந்த பிரபல நடிகை சென் ஷர்மா. பல வெற்றிப் படங்களில் நடித்து இந்தி சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்த இவர், கடந்த 2010 ஆம் ஆண்டு நடிகர் ரன்வீர் ஷோரியை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு 8 வயதில் மகன் இருக்கிறார்.
இந்த நிலையில், கருத்து வேறுபாட்டால் பிரிந்த நடிகை சென் ஷர்மா - நடிகர் ரன்வீர் ஷோரி, ஜோடி தற்போது விவாகரத்து பெற்று விட்டனர். மேலும், தங்களது மகனை வளர்ப்பதில் இருவரும் நண்பர்களாக இருக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...