Latest News :

”காற்றில் தேன் கலக்க பாடவா...” - நாஞ்சில் பி.சி.அன்பழகன்
Sunday August-16 2020

உடல் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நலம் பெற்று திரும்ப வேண்டும், என்று சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வரும் நிலையில், சில பிரபலங்கள் பாடகர் எஸ்.பி.பி குறித்து தங்களது பதிவுகளையும் வெளியிட்டு வருகிறார்கள்.

 

அந்த வகையில், இயக்குநர் தயாரிப்பாளர் மற்றும் அதிமுக நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் பாடகர் பாலசுப்ரமணியம் குறித்து வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

 

புரட்சித் தலைவரால், திரைத்துறையில் ஏற்றி வைக்கப்பட்ட தீபங்களில் ஒன்று, எஸ்.பி. பாலசுப்பிரமணியம்.

 

’அடிமைப் பெண்’ திரைப்படத்திற்காக, ”ஆயிரம் நிலவே வா..” பாடும் சொர்க்கப் பொழுதில் இளையநிலா பாலுவுக்கு உடல் நலமில்லை.

 

காலத்தை வைரமாக்கி - புகழின் சிகரத்திலிருந்த எம்.ஜி.ஆர் - பாலுவின் உடல் நலமாகும் வரை, சிற்பியின் பொறுமையாக காத்திருந்து, நேர்த்தியாக பாலு - பாட வாய்பளித்தார்.

 

நன்றாக பாடிய திருப்தியில் பாலு - புரட்சித் தலைவரிடம், "ஏன் எனக்காக காத்திருந்தீர்கள்" என ஆவலோடு கேட்டார்.

 

"பாலு - நீ என் படத்தில் பாடுவதாக உறவினர்கள் நண்பர்களிடம் சொல்லியிருப்பாய். உடல் நலத்தை காரணமாக வைத்து, வேறொவருக்கு அந்த வாய்ப்பை வழங்கினால், உனக்கு திறமையின்மையால் தான்  பாட வாய்ப்பு கிடைக்கவில்லையென உலகம் குறை சொல்லும்.

 

நல்ல கலைஞனுக்காக, காத்திருப்பதில் தவறில்லை.

 

மேகத்தின் மடியில் காத்திருந்த கடல் நீர் -நன்னீராய் தரையிறங்கும்."

 

- புன்னகையோடு - பாலுவின் தோள் தட்டி .. நம்பிக்கை வார்த்தைகளை பேசினார் மக்கள் திலகம்.

 

எளியவர்களின் உணர்வுகளுக்கும், இமலாய மரியதை தரும் சிகரம் தொட்ட மனிதப் -புனிதரை பார்த்து, உயிர் உருக - இமைகள் கசிந்தார் பாலு.

 

ஆறு முறை சிறந்த பாடகருக்கான தேசிய விருதுகள்.. ஒரே நாளில் 19 - பாடல்கள் பதிவு, அதிக மொழிகளில் - அதிக பாடல்கள்  பாடியதால் கின்னஸ் ரிக்கார்ட் .. பாலுவின் சாதனைகளை - பாலு தான் வெல்ல முடியும்.

 

தமிழ் -

பாசுரத்திற்கு

உயிர் கொடுத்த

வரமே..

காற்றில்

தேன் கலக்க

பாடவா..

 

நான் - இயக்கிய

காமராசு வில்

பாலு-

பாடிய

இரண்டு பாடல்களும்

தேடல்களை

திறந்து வைத்தன..

 

தாயைப் போல

பாடல்களில்

பாசத்தை பொழியும்

பாலசுப்பிரமணியத்தையும்

எல்லோருக்கும் பிடிக்கும்..

 

ஆயர்பாடி மாளிகையைில்

தாய் மடியில்

தூங்கும் கன்றே..

மாயக்கண்ணனை

துயிலெழுப்ப ..

மந்திர பாடலை

தர -

குயிலென

உற்சாகமாய் வருக..

 

நாடெல்லாம் பாலுவுக்கு ரசிகர்கள்.. பாலுவோ டெண்டுல்கரின் காதலர்.

 

பாலுவின் கிரிக்கெட் வெறிக்காக.. தனது கையெடுத்திட்ட பேட்டை தானமாக தந்து விட்டார்.. டெண்டுல்கர்.

 

அரைப்படி அரிசியில் அன்னதானம் .. அதிலே அதிகம் மேளதாளம்.. என விளம்பர தம்பட்ட காரர்கள் உலகில் .. எளிமையோடு - பிடித்த வேலையே செய்து - இயல்பாக வாழ்ந்தவரே பாலு.

 

இளையராஜா மெட்டுக்கு..பாலுவை மீட்டுக் கொண்டு வரும் தெய்வீக - சிரஞ்சீவி சக்தி உண்டு.

 

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related News

6893

ஆதரவற்றோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!
Wednesday November-19 2025

தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...

பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் படம் துவங்கியது!
Wednesday November-19 2025

‛மாயா’, ‘மாநகரம்’, ’மான்ஸ்டர்’, ‘டாணாக்காரன்’, ’இறுகப்பற்று’, ’பிளாக்’ என தொடர்ச்சியாக 6 வெற்றிப்படங்களுக்குப் பிறகு, பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் 7-வது திரைப்படத்தில் கதையின் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்...

திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’ ஜீ5-ல் நவம்பர் 28 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது!
Wednesday November-19 2025

முன்னணி ஓடிடி தளமான ஜீ5 தளத்தின் புதிய திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’...

Recent Gallery