’ஸ்பைடர்’ படத்தில் இணைந்த பிரபல பாடகர்
Wednesday July-19 2017

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், மகேஷ் பாபு நடிக்கும் ‘ஸ்பைடர்’ மிக பிரம்மாண்ட படமாக உருவாகி வருகிறது. ஹரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல பாடகர் பிரிஜேஷ் சாண்டில்யா ஒரு பாடல் பாடியுள்ளார்.

 

இது குறித்து பிரிஜேஷ் சாண்டில்யா கூறுகையில், “ஏ.ஆர். முருகதாஸ், மகேஷ் பாபு மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற ஜாம்பவான்களோடு பணிபுரிவது எனது கனவாகும். சினிமாவில் பல சாதனைகளை செய்துள்ள இவர்கள் இன்னமும் எளிமையாக இருப்பதை கண்டு வியந்தேன். இந்த வாய்ப்பினை எனக்கு அளித்ததிற்காக அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இசைக்கு மொழிகளோ எல்லைகளோ இல்லவே இல்லை என்பதை நம்பும் எனக்கு, இப்பாடல் மூலம் தென்னிந்தியா சினிமாவில் நுழைவதில் மட்டற்ற மகிழ்ச்சி. ஹாரிஸ் ஜெயராஜ் சாரின் இசையில் நான் பாடியிருக்கும் இப்பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது. இது ஒரு மாபெரும் ஹிட் பாடல் ஆகும் என உறுதியாக கூறுவேன். இசை பற்றியும் அதன் நுணுக்கங்கள் பற்றியும் ஹாரிஸ் சாரிடம் நிறைய கற்றுக்கொண்டேன். அவருடன் பணிபுரிந்ததில் எனக்கு பெருமை. இப்பாடல் ரசிகர்களை நிச்சயம் கவர்ந்து மயக்கும் என நம்புகிறேன்.” என்றார்.

Related News

69

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery