Latest News :

பழம்பெரும் பாடலாசிரியர் பட்டுக்கோட்டையாரின் வாரிசு சினிமாவில் எண்ட்ரி!
Saturday September-23 2017

பழம்பெரும் பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணம்சுந்தரத்தின் அண்ணன் மகன்  சண்முக சுந்தரம் ‘ஒளதடம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமாகிறார்.

 

ரெட் சில்லி பிளாக் பெப்பர் சினிமாஸ் நேதாஜி பிரபு, கதை எழுதி தயாரித்து கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ஒளடதம்.

 

மனிதர்களுக்கு ஊறுவிளைவிக்கும் மருந்துகளைத் தயாரித்தல் அதனை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் உதவியுடன் சட்டவிரோதமாக் சந்தைப்படுத்துதல் என்று விரியும் மெடிக்கல் திரில்லர் வகைப்படமான ஒளடதத்தைத் திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்  ரமணி.

 

சென்னையைச் சேர்ந்த பிரபல நீரிழிவு மருத்துவரின் சுயலாபத்திற்காக, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் மருந்து தடைசெய்யப்பட்டு மீண்டும் பயன்பாட்டிற்கு வந்த 10 நாட்களுக்குள் நடக்கும் விறுவிறுப்பான சம்பவங்களைத் துணிச்சலாகச் சொல்லி விழிப்புணர்வு செய்திருக்கிறார் இயக்குநர் ரமணி.  உண்மையைச்  சொல்ல வேண்டும் என்பதற்காக  தீவிரமான ஆராய்ச்சி செய்து ஒளடதம் கதையை எழுதியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அண்ணன் மகன் சண்முகசுந்தரம் இந்தப்படம் மூலம் பாடலாசிரியராக அறிமுகமாகிறார். சிங்கப்பூர் கலைவேந்தன், தமிழமுதன், சோ.சிவாகுமார் பிள்ளை, விஜயகிருஷ்ணன் ஆகியோர் பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.

 

இசையமைப்பாளர் தஷி இசையில் உருவான இந்தப் படத்தின் பாடல்களை இயக்குநர் பேரரசு வெளியிட குரங்குபொம்மை இயக்குநர் நித்திலன் பெற்றுக்கொண்டார்.

 

விழாவில் கில்டு செயலாளர் ஜாக்குவார் தங்கம் மற்றும் ஸ்ரீராம், கே.வி.குணசேகர், மக்கள் தொடர்பாளர் சங்க பொருளாளர் விஜயமுரளி,பெருதுளசிபழனிவேல், ரஞ்சன், தமிழமுதன், திருமலை சிவம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

நாயகியாக டெல்லியைச் சேர்ந்த மாடல் சமீரா, இரண்டாவது நாயகனாக சந்தோஷ், நடித்திருக்கிறார்கள்.

 

படத்தைப் பார்த்து பிரமித்த கீழக்கரை அஜ்மல்கான், இந்தப்படத்தை வெளியிடுகிறார்.

Related News

690

இணையத் தொடர் இயக்க முதலில் தயங்கினேன்! - ‘குட் வொய்ஃப்’ தொடர் பற்றி நடிகை ரேவதி
Friday July-04 2025

ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...

ரசிகர்களின் அன்பு வியக்க வைத்து விட்டது! - ‘லவ் மேரேஜ்’ வெற்றி விழாவில் நடிகர் விக்ரம் பிரபு உற்சாகம்
Friday July-04 2025

அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம்  - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

’டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ் 2’ புத்தகம் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற திரை பிரபலங்கள்
Thursday July-03 2025

தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...

Recent Gallery