தொலைக்காட்சி தொடர்களில் முதன்மை தொடராக ‘செம்பருத்தி’ தொடர் உள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த தொடர் தான் டி.ஆர்.பி ரேட்டிங்கில் நம்பர் ஒன். இதனை முறியடிக்க மற்றொரு முன்னணி சேனல் எடுக்கும் அத்தனை முயற்சிகளையும் செம்பருத்தி தொடர் முறியடித்து வருகிறது.
இதற்கிடையே, ‘செம்பருத்தி’ தொடரில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த பரதா நாயுடு, திடீரென்று அத்தொடரில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால், அதற்கான காரணத்தை ஜீ தமிழ் தொலைக்காட்சி தெரிவிக்காத நிலையில், பரதா நாயுடு தற்போது தெரிவித்துள்ளார்.
பரதா நாயுடுக்கு கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது அனைவரும் அறிந்தது தான். அவர் தனது திருமணத்திற்காக சில நாட்கள் விடுமுறை கேட்டாராம். அதற்காக அவரை சீரியலில் இருந்தே தூக்கி விட்டார்களாம்.

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...