தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் சார்பில் அந்த சங்க உறுப்பினர்கள் மற்றும் பெப்சி கூட்டமைப்பு தொழிலாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சித்தா மருந்தான 'கபசுர குடிநீர்' பொடியும் ஹோமியோபதி மருந்தான 'ஆர்கானிக்கம் ஆல்பம் - 30' ஆகியவை இயக்குநர்கள் சங்கம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குநர் சங்க செயலாளார் ஆர்.வி.உதயகுமார், இயக்குநர் பேரரசு உள்ளிட்டோர், சினிமா சங்கங்களுக்கு இந்த உயிர் காக்கும் மருந்துகளை சங்கம் சார்பில் வழங்கி வருகிறார்கள்.
அதன் தொடர்ச்சியாக சினிமா பத்திரிகையாளர்களுக்கும் மேற்படி, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சித்தா மருந்தான கபசுர குடிநீர் பொடியும், ஹோமியோபதி மருந்தான ஆர்கானிக்கம் ஆல்பம் - 30 யும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சார்பில் வழங்க முன் வந்தனர்.
உடனடியாக நம் 65 ஆண்டு பாரம்பரியம் மிக்க சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் D.R.பாலேஷ்வர் அவர்களை தொடர்பு கொண்டு, 200 கபசுர குடிநீர் பாக்கெட்டுகளையும், 500 ஆர்கானிக்கம் ஆல்பம் - 30 ஹோமியோபதி மருந்து புட்டிகளையும் வழங்கி அவற்றை உட்கொள்ளும் முறையையும் விலக்கி ஒரு ஆடியோ பதிவையும் கொடுத்துள்ளனர்.
கொரோனா தொற்று ஏற்படாமல் மனித உயிர் காக்கும் மருந்துகள் என்பதால், சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு மட்டின் இன்றி அனைத்து சினிமா பத்திரிகையாளர்களுக்கும் இம்மருந்துகளை சினிமா பத்திரிகையாளர் சங்கம் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...
‛மாயா’, ‘மாநகரம்’, ’மான்ஸ்டர்’, ‘டாணாக்காரன்’, ’இறுகப்பற்று’, ’பிளாக்’ என தொடர்ச்சியாக 6 வெற்றிப்படங்களுக்குப் பிறகு, பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் 7-வது திரைப்படத்தில் கதையின் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்...
முன்னணி ஓடிடி தளமான ஜீ5 தளத்தின் புதிய திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’...