தொலைக்காட்சி ரசிகர்களின் பேவரைட் நிகழ்ச்சியான பிக் பாஸின் நான்காவது சீசன் வரும் செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கான போட்டியாளர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், சில போட்டியாளர்களின் பெயர்கள் லீக்காகி வருகிறது.
அதன்படி, வனிதாவின் 3 வது திருமணத்தை வைத்து விளம்பரம் தேடிக் கொண்ட சூரியா தேவி என்ற பெண்ணையும் பிக் பாஸ் வீட்டுக்குள் களம் இறக்க நிகழ்ச்சி தயாரிப்பு குழு முடிவு செய்து, அவரை ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போது, முன்னாள் போட்டியாளர் வனிதாவையும் பிக் பாஸ் வீட்டுக்குள் வரவைக்கும் ஏற்பாடும் நடக்கிறதாம்.
இப்படி, பலவிதமான ஐட்டங்களுடன் நான்காவது சீசன் பிக் பாஸை வேற லெவலுக்கு கொண்டு செல்ல வேண்டும், என்று திட்டமிட்டிருக்கும் விஜய் தொலைக்காட்சி, இழந்த டி.ஆர்.பி-யை பிடிப்பதற்காக முழு கவனத்தையும் பிக் பாஸ் நிகழ்ச்சி மீது வைத்துள்ளதாம்.
இதற்கிடையே, பிக் பாஸ் சீசன் 4-ன் விளம்பரப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியிருப்பதாக, சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த அந்த விளம்பரப் படம் முடிவடைந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நிமிடங்கள் ஓடும் அதில் கமல்ஹாசன் அசத்தலான லுக்கில் தோன்ற இருக்கிறார்.
தற்போது, அந்த விளம்பர படத்தின் சில புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. கமல்ஹாசன் மாஸான லுக்கிலும் இருக்கும் அந்த புகைப்படங்கள் இதோ,

தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...
‛மாயா’, ‘மாநகரம்’, ’மான்ஸ்டர்’, ‘டாணாக்காரன்’, ’இறுகப்பற்று’, ’பிளாக்’ என தொடர்ச்சியாக 6 வெற்றிப்படங்களுக்குப் பிறகு, பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் 7-வது திரைப்படத்தில் கதையின் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்...
முன்னணி ஓடிடி தளமான ஜீ5 தளத்தின் புதிய திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’...