ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் அடையாளம் காணப்பட்ட ஜூலி, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகிவிட்டார். அந்நிகழ்ச்சியை தொடர்ந்து திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் நடிக்க தொடங்கியவர் அவ்வபோது சர்ச்சையில் சிக்குவதோடு, சமூக வலைதளங்களில் ரசிகர்களால் வறுத்தெடுக்கப்பட்டு வருகிறார்.
இதற்கிடையே, சமீபத்தில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி விதவிதமான புகைப்படங்களை வெளியிட்ட ஜூலிக்கும், நடிகை ஒருவரும் இடையே பெரிய பஞ்சாயத்து ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த நடிகை ஜூலி பற்றிய சில ரகசியங்களை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் நடிகையும், ரேடியோ ஜாக்கியுமான பிரியா மேக்கப் ஸ்டுடியோ ஒன்றை தொடங்கியுள்ளார். அதற்காக சில பிரபலங்களை வைத்து போட்டோ ஷூட் நடத்தி அதை தனது மேக்கப் ஸ்டுடியோவின் விளம்பரத்திற்கு பயன்படுத்தி வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் ஜூலியை வைத்து அவர் நடத்திய புகைப்படங்கள் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை பிரியா பயன்படுத்த ஜூலி, எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். காரணம் பணம் தான். தான் சொல்லும் போது தான் குறிப்பிட்ட சில புகைப்படங்களை வெளியிட வேண்டும், என்று ஜூலி கூற, அதை ஏற்றுக்கொள்ளாத பிரியா, போட்டோ ஷூட்டுக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை செலவு செய்திருக்கிறேன், அதை எப்போது பயன்படுத்த வேண்டும், என்பது குறித்து நான் தான் முடிவு செய்வேன், இதில் ஜூலி தலையிட கூடாது, என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால், கடுப்பான ஜூலி வக்கிலோடு வருகிறேன், என்று பிரியாவை மிரட்ட, ஜூலிக்கு ஒரு வக்கில் கிடைத்தால் எனக்கு ஒரு வக்கில் கிடைக்க மாட்டாரா, என்று கூறும் பிரியா, ஜூலி போட்டோ ஷூட்டின் போது, சிகரெட் மற்றும் சரக்கு கேட்டதோடு, சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கும் போதே, புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள் என்றாராம்.
தற்போது அந்த புகைப்படங்கள் எங்கே வெளியாகிவிட போகிறது, என்ற பயத்தில் தான் அவர் இப்படி பேசுகிறார். என்று கூறும் பிரியா, இதை சாதாரணமாக சொல்லாமல் மிரட்டுவது போல அவர் சொல்வது எப்படி சரியாகும், என்றும் கூறுகிறார்.
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...