தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், கதாநாயகியாக நடிப்பதோடு, கதையின் நாயகியாகவும் பல படங்களில் நடித்து நடித்து வருகிறார். அந்த வகையில், அவர் நடிக்கும் கதாநாயகியை மையப்படுத்திய படம் ‘பூமிகா’. இப்படம் ஐஸ்வர்யா ராஜேஷின் 25 வது படம் என்பது கூடுதல் சிறப்பு.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை ரதீந்தரன் ஆர்.ப்ரசாத் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ‘வேதாளம் சொல்லும் கதை’ என்ற படத்தை இயக்கியுள்ளார். அப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
ஐஸ்வர்யா ராஜேஷ், பாவல் நவகீதன் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் ஏராளமான புதுமுக நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ராபர்டோ ஜாஜாரா என்ற இத்தாலிய ஒளிப்பதிவாளர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ப்ரித்வி சந்திரசேகர் இசையமைட்ர்ஹ்துள்ளார்.
படத்தின் டைடில் மோசன் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், படத்தின் பஸ்ட் லுக் மற்றும் டீசரை விரைவில் வெளியிடும் பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளது.
'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்...
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...