பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொள்பவர்களில் பலருக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கிறது. ஏற்கனவே சினிமாவில் நடித்து வாய்ப்பின்றி இருப்பவர்களுக்கு மீண்டும் வாய்ப்புகள் கிடைக்கிறது. அந்த வகையில், பிக் பாஸ் சீசன் 3-யின் போட்டியாளர்கள் பலருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்துள்ளது.
இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 3-யின் டைடில் வின்னரான முகேன் ராவும் வெள்ளித்திரையில் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவர் ஹீரோவாக நடிக்கும் படத்தை பெண் இயக்குநர் அஞ்சனா அலிகான் இயக்குகிறார். இவர் ஏற்கனவே நானி, நித்யா மேனன் ஆகியோரது நடிப்பில் வெளியான ‘வெப்பம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.
மேலும், முகேன் ராவ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஹீரோயினாக திவ்யா பாரதி அல்லது சீரியல் நடிகை ஷிவானி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போது படத்தில் நடிக்க இருக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வரும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...
‛மாயா’, ‘மாநகரம்’, ’மான்ஸ்டர்’, ‘டாணாக்காரன்’, ’இறுகப்பற்று’, ’பிளாக்’ என தொடர்ச்சியாக 6 வெற்றிப்படங்களுக்குப் பிறகு, பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் 7-வது திரைப்படத்தில் கதையின் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்...
முன்னணி ஓடிடி தளமான ஜீ5 தளத்தின் புதிய திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’...