Latest News :

உழைப்பாளிகளின் நம்பிக்கை நாயகனாக திகழ்ந்தார் - வசந்தகுமார் பற்றி நடிகர் துரை சுதாகர்
Monday August-31 2020

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், வசந்த் & கோ நிறுவனத்தின் உரிமையாளருமான எம்.பி வசந்தகுமார், உடல் நலக்குறைவால் கடந்த 28 ஆம் தேதி உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கு, அவரது சொந்த ஊரில் நடைபெற்றது.

 

வசந்தகுமாரின் மரணத்திற்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், ‘களவாணி 2’, ‘டேனி’ ஆகிய படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து, எதார்த்தமான நடிப்பால் பாராட்டு பெற்ற பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், வசந்தகுமாரின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்ததோடு, அவர் பற்றி உருக்கமாகவும் பதிவிட்டுள்ளார்.

 

அதில், ”உழைத்தால் நிச்சயம் உயரலாம், என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர்களில் முக்கியமானவரான வசந்தகுமார், உழைப்பாளிகளின் நம்பிக்கை நாயகனாகவும் திகழ்ந்தார்.

 

சுறுசுறுப்பு, உழைப்பு இவை இரண்டை மட்டுமே முக்கிய மூலதனமாக கொண்டு இந்தியாவின் முக்கியமான தொழிலதிபர்களில் ஒருவராக உயர்ந்து, தமிழர்களுக்கு பெருமை சேர்த்த அண்ணன் வசந்தகுமாரின் இறப்பை தாங்கிக் கொள்ள முடியவில்லை, என்பதை விட மனம் ஏற்றுக் கொள்ளவில்லை, என்று தான் சொல்ல வேண்டும்.

 

நெருங்கி பழகவில்லை என்றாலும், ஒரு சிலர் மீது நாம் மிகுந்த அன்பும், அவர் மீது ஈர்ப்பும் கொண்டிருப்போம். அப்படி ஒருவர் தான் அண்ணன் வசந்தகுமார். பேச்சு, உடை என அனைத்திலும் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்கிய அண்ணனின் ரசிகனாக இருந்த என்னை அவரது இறப்பு கலங்கடித்துவிட்டது.

 

பிறப்பும், இறப்பும் மனிதர்களின் வாழ்க்கையில் நடப்பவை தான், என்றாலும் வசந்தகுமார் போன்றவர்களின் இறப்பை மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. 

 

அண்ணன் வசந்தகுமாரை இழந்து வாடும் குடும்பம், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள், தொகுதி மக்கள் என அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டிக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Related News

6916

ஆதரவற்றோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!
Wednesday November-19 2025

தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...

பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் படம் துவங்கியது!
Wednesday November-19 2025

‛மாயா’, ‘மாநகரம்’, ’மான்ஸ்டர்’, ‘டாணாக்காரன்’, ’இறுகப்பற்று’, ’பிளாக்’ என தொடர்ச்சியாக 6 வெற்றிப்படங்களுக்குப் பிறகு, பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் 7-வது திரைப்படத்தில் கதையின் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்...

திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’ ஜீ5-ல் நவம்பர் 28 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது!
Wednesday November-19 2025

முன்னணி ஓடிடி தளமான ஜீ5 தளத்தின் புதிய திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’...

Recent Gallery