சாயீஷா, ஆர்யா குடும்பத்தில் நிகழ்ந்த மரணம்!
Thursday September-03 2020

'வனமகன்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சாயீஷா, தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்த நிலையில், நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். தற்போது சாயீஷாவும், ஆர்யாவும் ஜோடியாக டெட்டி என்ற படத்தில் நடித்து வருகிறார்கள்.

 

இந்த நிலையில், சாயீஷாவின் குடும்பத்தில் நிகழ்ந்த அடுத்தடுத்த மரணத்தால் அவரும், ஆர்யாவும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

 

அதாவது, சாயீஷாவின் தாத்தாவான பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமாரின் சகோதரர்கள் இஹ்சான் கான் மற்றும் அஸ்லாம் கான் ஆகியோர் கடந்த 16 ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒருவருக்கு 90 வயது, மற்றொருவருக்கு 88 வயது என்பதால், அவர்களது உடல் நிலை கவலைக்கிடமாக இருந்தது.

 

இதற்கிடையே, அஸ்லாம் கான் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்த நிலையில், திலீப் குமாரின் மற்றொரு சகோதரரான இஹ்சான் கானும் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

 

தனது இரண்டு தாத்தாக்கல் அடுத்தடுத்து உயிரிழந்ததால் சாயீஷாவும், அவரது கணவர் ஆர்யாவும் பெரும் சோகத்தில் உள்ளனர்.

Related News

6921

’கெணத்த காணோம்’ வெற்றியால் யோகி பாபு எடுத்த புது முடிவு!
Friday March-20 2026

மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த ‘கெணத்த காணோம்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

Recent Gallery