தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான பா.இரஞ்சித், நீலம் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் மூலம் திரைப்பட தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். அவர் தயாரித்த ‘பரியேறும் பெருமாள்’ மற்றும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், மேலும் சில படங்களை தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில், கலையரசன், அஞ்சலி பாட்டில் நடிப்பில் உருவாகியுள்ள ‘குதிரைவால்’ என்ற படத்தை நீலம் புரொடக்ஷன்ஸ் வெளியிடுகிறது.
முற்றிலும் மாறுபட்ட திரைப்படமாக உருவாகியிருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் மனோஜ் லியோனல் ஜாசன் - ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இயக்கியிருக்கிறார்கள். ராஜேஷ் எழுதியிருக்கிறார்.
உளவியல், ஆள் மன கற்பனைகள் மற்றும் டைம் டிராவல் குறித்த ஒரு அறிவியல் புனைவுப்படமாகவும், வழக்கமான சினிமாவிலிருந்து மாறுபட்டதாகவும், மேஜிக்கல் ரியாலிச சினிமாவாகவும் உருவாகியிருக்கும் இப்படம் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி இந்திய சினிமாவிலும் புதிய முயற்சியாக இருக்கும், என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
யாழி பிலிம்ஸ் சார்பில் விக்னேஷ் சுந்தரேசன் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு பிரதீப் - மார்டின் விசர் இசையமைத்திருக்கிறார்கள்.
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...
‛மாயா’, ‘மாநகரம்’, ’மான்ஸ்டர்’, ‘டாணாக்காரன்’, ’இறுகப்பற்று’, ’பிளாக்’ என தொடர்ச்சியாக 6 வெற்றிப்படங்களுக்குப் பிறகு, பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் 7-வது திரைப்படத்தில் கதையின் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்...
முன்னணி ஓடிடி தளமான ஜீ5 தளத்தின் புதிய திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’...