இயக்குநராக பல வெற்றிகளைப் பார்த்த எஸ்.ஜே.சூர்யா, ஹீரோவாக பல தோல்விகளை பார்த்தாலும் துவண்டு விடாமல், ஹீரோவாக சாதிப்பேன், என்ற நம்பிக்கையில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
கார்த்தி சுப்புராஜின்‘இறைவி’ படத்தை தொடர்ந்து செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்று ஹீரோவாக நடித்தவர், ‘ஸ்பைடர்’, ‘மெர்சல்’ ஆகிய படங்களில் வில்னாகவும் களம் இறங்கியுள்ளார்.
மூன்று மொழி சினிமாவிலும் நல்ல மார்க்கெட் உள்ள ஹீரோவாக வேண்டும், என்பதே தனது லட்சியம் என்று கூறிய எஸ்.ஜே.சூர்யா, இப்படி வில்லனானது ஏன்? என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில், “ஹீரோவாக நடிப்பது தான் லட்சியம். இருந்தாலும், மகேஷ் பாபு, விஜய் போன்ற ஹீரோக்களின் படங்களில் வில்லன் வேடம் என்பதும் பெருமை தான். ரஜினி, சத்யராஜ், ஷாருக்கான் என்று பல வில்லனாக நடித்து தான் ஹீரோவாக நின்றார்கள். நல்ல ஐடியாலஜி உள்ள நடிகன் தான் ஹீரோ. இந்த எண்ணம் என்னை சரியாக வளர்த்துக் கொண்டு போகும்னு நம்புறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், திருமணம் எப்போது? என்ற கேள்விக்கு பதில் அளித்த எஸ்.ஜே.சூர்யா, “எனது கனவு ரொம்ப பெருசு. இலக்குன்னு எனக்கு நான் நிர்ணயிச்சதுல 50 சதவீதத்தை அடைந்தால் தான், திருமணத்தை பற்றியே யோசிப்பேன். மனசளவுல முதல்ல செட்டில் ஆக வேண்டும், அப்போது தான் என்னால ஓட முடியும். லயோலா கல்லூரியில் படிப்பை முடிச்சுட்டு வெளியே வந்து ஐந்து வருடங்கள் ஆன மனநிலையில் தான் இப்போ நான் இருக்கேன்.” என்றார்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...