Latest News :

மதம் மாற்றம்! - வனிதாவின் அதிரடி நடவடிக்கை
Saturday September-12 2020

பிக் பாஸ் மூலம் மக்களிடம் பிரபலமான நடிகை வனிதா விஜயகுமார், தனது மூன்றாவது திருமணத்தால் பெரும் சர்ச்சையில் சிக்கினார். இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான பீட்டர் பாலை வனிதா மூன்றாவதாக திருமணம் செய்துக் கொண்டார். பீட்டர் பால் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே வனிதாவை திருமணம் செய்ததால், அவருக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அவரது முதல் மனைவி எலிசபெத் காவல் துறையில் புகார் அளித்தார்.

 

இதையடுத்து தனக்கும், வனிதாவுக்கும் நடந்தது திருமணம் அல்ல, அன்பின் பரிமாற்றம், என்று பீட்டர் பால் கூறினாலும், அவர் வனிதாவுடன் வாழ்ந்து வந்தார்.

 

இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு பீட்டர் பாலுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ள பீட்டர் பாலுக்காக வனிதா சில சிறப்பு வழிபாடுகளை நடத்தி வருகிறார். அதன்படி, தனது வீட்டில் இருக்கும் குபேர லக்‌ஷ்மிக்கு வனிதா சிறப்பு பூஜை நடத்தியுள்ளார்.

 

தனது இரண்டு மகள்கள் மற்றும் பீட்டர் பாலை வைத்துக் கொண்டு வனிதா இந்த சிறப்பு பூஜையை நடத்தியதோடு, தனது மூன்றாவது கணவருடன் பணத்தில் ஆன மாலையை அணிந்துக் கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

 

இந்த புகைப்படட்தை பார்த்த ரசிகர்கள் பலர், வனிதாவுக்காக பீட்டர் பால் கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறிவிட்டதாக கூறுகிறார்கள்.

 

Vanitha Vijayakumar

Related News

6938

’லாரா’ படத்தின் தலைப்பு போஸ்டரை வெளியிட்ட நடிகர் சத்யராஜ்!
Saturday June-15 2024

'நாக்குக்கு நரம்பில்லை . எதை வேண்டுமானாலும்  பேசும்' என்பார்கள்...

”டிஜிட்டல் தளங்களில் படைப்பு சுதந்திரம் இல்லை” - ’கருடன்’ வெற்றி விழாவில் வெற்றிமாறன் பேச்சு
Saturday June-15 2024

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சூரி நாயகனாகவும், சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடிக்க, கடந்த மாதம் வெளியான ‘கருடன்’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...

”‘கண்ணப்பா’ காவியம் உருவாவதற்கு காரணம் சிவபெருமான் தான்” - டீசர் வெளியீட்டு விழாவில் டாக்டர்.மோகன் பாபு நெகிழ்ச்சி
Friday June-14 2024

விஷ்ணு மஞ்சுவின் கனவுத் திட்டமான 'கண்ணப்பா' படத்தை ஏவிஏ என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் 24 பிரேம்ஸ் பேக்டரி நிறுவனங்கள் இணைந்து பிரமாண்டமாக தயாரித்து வருகிறது...