முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானப் இக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனின் வெற்றியாளர் ஆரவ். இவர் ‘மார்க்கெட் ராஜா’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். ஆரவுக்கும் நடிகை ராகீக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் போட்டியாளர்களான சினேகன், சுஜா, ஆர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டார்கள். ஆனால், ஆரவின் நெருங்கிய நண்பரான ஓவியா மட்டும் கலந்துக் கொள்ளவில்லை.
இந்த நிலையில், ஆரவின் திருமணத்தை தவிர்த்தது குறித்து சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கம் அளித்திருக்கும் நடிகை ஓவியா, “இந்த உலகம் மிகவும் பயங்கரமானது. அது தீமை செய்பவர்களால் அல்ல, எதுவும் செய்யாமல் இருப்பவர்களால் தான்” என்று பதிவிட்டுள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் இருக்கு போது ஆரவை மிக தீவிரமாக காதலித்த ஓவியா, அவருக்காக தற்கொலை செய்ய முயன்று அதனால், போட்டியில் இருந்து பாதியில் வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...
‛மாயா’, ‘மாநகரம்’, ’மான்ஸ்டர்’, ‘டாணாக்காரன்’, ’இறுகப்பற்று’, ’பிளாக்’ என தொடர்ச்சியாக 6 வெற்றிப்படங்களுக்குப் பிறகு, பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் 7-வது திரைப்படத்தில் கதையின் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்...
முன்னணி ஓடிடி தளமான ஜீ5 தளத்தின் புதிய திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’...