விஜய் நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான படம் ‘வேட்டைக்காரன்’. இப்படத்தை பாபு சிவன் என்பவர் இயக்கினார். இவர் தான் விஜயின் ‘குருவி’ படத்திற்கும் வசனம் எழுதினார்.
திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த இயக்குநர் பாபு சிவன், தற்போது சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்திருக்கிறார். அவரது மரண செய்தியால் தமிழ் திரையுலகமே பெரும் அதிர்ச்சியடைந்துள்ளது.

கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்ட இயக்குநர் பாபு சிவன், கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்திருக்கிறார். ஆனால், தீவிர சிகிச்சை அளித்தும் அவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், அவர் இன்று உயிரிழந்தார்.
மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த ‘கெணத்த காணோம்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...