தெலுங்கு பிக் பாஸின் சீசன் 4 ஒளிபரப்பாகி வருகிறது. நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக நடிகரும் இயக்குநருமான சூரிய கிரண் கலந்துக் கொண்டார். இருப்பினும் இவர் போட்டியின் முதல் வாரத்திலேயே வெளியேற்றப்பட்டார்.. பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேறிய சூரிய கிரண், அளித்த பேட்டி ஒன்றில், தனது மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றது குறித்து தனது வருத்தத்தை தெரிவித்ததோடு, கண்ணீர் விட்டு அழவும் செய்தார்.
‘காசி’, ‘சமுத்திரம்’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்திருப்பவர் காவேரி. கல்யாணி என்ற பெயரிலும் நடித்து வரும் இவர் தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தான் சூரிய கிரணின் முன்னாள் மனைவி ஆவார். இவருக்கும் சூரிய கிரணுக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால், இவர்கள் ஒரு சில ஆண்டுகளில் பிரிந்து விட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டியில் தனது விவாகரத்து குறித்து பேசிய நடிகர் சூரிய கிரண், கல்யாணி தான் எனது உலகம். அவள் மீண்டும் என்னிடம் திரும்ப வந்துவிடுவாள் என்று நான் நம்புகிறேன். இப்போதும் எனது செல்போன் ஹைபேட் உள்ளிட்டவைகளில் அவளது புகைப்படத்தை தான் வைத்திருக்கிறேன். இந்த ஜன்மத்தில் அவளை தவிர வேறு யாருக்கும் என் வாழ்க்கையில் இடம் இல்லை, என்று கூறி கண்ணீர் விட்டு அழுதார்.
மேலும், தன்னைவிட்டு கல்யாணி பிரிந்து செல்வதற்கு தனக்கு ஏற்பட்ட பொருளாதார கஷ்ட்டம் தான் காரணம், என்றும் சூரிய கிரண் கூறியிருக்கிறார். சொந்தமாக திரைப்படம் தயாரித்த சூரிய கிரண், அதனால் ஏற்பட்ட நஷ்ட்டத்தால் தனது வீடு, கார் என அனைத்தும் விற்று விட்டாராம். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே கல்யாணி அவரை விட்டு பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...
‛மாயா’, ‘மாநகரம்’, ’மான்ஸ்டர்’, ‘டாணாக்காரன்’, ’இறுகப்பற்று’, ’பிளாக்’ என தொடர்ச்சியாக 6 வெற்றிப்படங்களுக்குப் பிறகு, பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் 7-வது திரைப்படத்தில் கதையின் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்...
முன்னணி ஓடிடி தளமான ஜீ5 தளத்தின் புதிய திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’...