பாக்யராஜ் இயக்கி நடித்து பல வெற்றிப் படங்களை கொடுத்திருக்கிறார். அப்படி அவரது வெற்றிப் படங்களில் மிக முக்கியமான படங்களில் ஒன்று தான் ‘முந்தானை முடிச்சு’. நகர்புறம், கிராமப்புறம் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து மாபெரும் வெற்றிப் பெற்ற இப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையையும் நிகழ்த்தியது.
இப்படம் வெளியாகி 37 ஆண்டுகள் ஆன நிலையில், மீண்டும் புதிய பொலிவுடன் ‘முந்தானை முடிச்சு’ உருவாக உள்ளது. பாக்யராஜின் கதை, திரைக்கதை, வசனத்தில் தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்ப சில மாற்றங்களுடன் உருவாகும் இப்படத்தில் ஹீரோவாக சசிகுமார் நடிக்க, அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.
ஜே.எஸ்.பி பிலிம்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் ஜே.எஸ்.பி.சதீஷ் தயாரிக்கும் இப்படத்தின் அறிவிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் இயக்குநர் உள்ளிட்ட மற்ற விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.
யாஷூ எண்டர்டெயின்மெண்ட் (Yasho Entertainment) சார்பில், Dr...
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...
நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி, ஜி...