‘சைக்கோ’ படத்திற்குப் பிறகு விஷாலை வைத்து ’துப்பறிவாளன் 2’ இயக்கி வந்த மிஷ்கின், விஷாலுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அப்படத்தில் இருந்து விலகியர், சிம்புவை வைத்து ஒரு படம் இயக்க இருப்பதாக கூறப்பட்டது. மேலும், அருண் விஜயை வைத்து ‘அஞ்சாதே’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போவதாகவும் கூறினார். ஆனால், அப்படங்கள் பற்றிய எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், இயக்குநர் மிஷ்கின் தனது புதிய படத்தின் அறிவிப்பை நள்ளிரவு வெளியிட்டார். ‘பிசாசு’ இரண்டாம் பாகமாக உருவாக உள்ள இப்படத்திற்கு ‘பிசாசு 2’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் டி.முருகானந்தம் இப்படத்தை தயாரிக்கிறார். கார்த்திக் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் தொடங்க உள்ளது.

'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்...
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...