Latest News :

மீண்டும் சூடுபிடித்த பாலியல் புகார்! - கஸ்தூரியால் கோலிவுட்டில் பரபரப்பு
Tuesday September-22 2020

பெண்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வந்தாலும், பாலியல் ரீதியிலான பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொண்டு வருகிறார்கள். இது அனைத்து துறைகளில் இருந்தாலும், சினிமாத் துறையில் சற்று அதிகமாகவே இருப்பதாக பலர் குற்றம் சாட்டி வருகிறார்கள். குறிப்பாக சினிமாவில் இருக்கும் பெண்கள் அனைவர் மீது தவறான பார்வையே பலருக்கு இருக்கிறது. அதிலும், நடிகை என்றால் சொல்லவே வேண்டாம், அவர்கள் நடிப்பதோடு, பலரோடு செக்ஸும் வைத்துக் கொள்வார்கள், என்ற ரீதியில் பலர் நினைக்கிறார்கள்.

 

மேலும், சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பலரிடம் படுக்கையை பகிர்ந்துக் கொள்ள வேண்டும், என்பது சினிமாவில் எழுதப்படாத சட்டமாக இருக்கும் சூழலும் நிலவுகிறது. இது தமிழ் சினிமா மட்டும் அல்ல, இந்திய சினிமா மற்றும் ஹாலிவுட் சினிமாவிலும் இருக்கிறது.

 

சமீபத்தில் இந்த பாலியல் புகார் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து “மீ டூ” என்ற வார்த்தை உலக அளவில் டிரெண்டானதோடு, துணை நடிகைகள் முதல் முன்னணி நடிகைகள் வரை அனைவரும் சினிமாவில் பாலியல் தொல்லை இருப்பதை ஒப்புக் கொண்டார்கள். அதே சமயம், தனக்கு அதுபோல் இதுவரை நடந்தது இல்லை, என்று பல முன்னணி நடிகைகள் கூறிய நிலையில், பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், ஹீரோவுடன் படுத்து தான் சினிமா வாய்ப்பை பெற்றேன், என்று சமீபத்தில் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இந்த நிலையில், தமிழ் சினிமாவின் முன்னாள் கதாநாயகியான நடிகை கஸ்தூரி, பாலியல் தொல்லை குறித்து சமீபத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, சினிமாவில் பாலியல் தொல்லை இருப்பது குறித்து பல பேட்டிகளில் பேசியிருக்கும் கஸ்தூரி, தன்னையும் பலர் படுக்கைக்கு அழைத்திருப்பதாக வெளிப்படையாக கூறியிருந்தார்.

 

இதற்கிடையே, பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது, நடிகை பாயல் கோஷ் செக்ஸ் புகார் அளித்திருக்கிறார். இது குறித்து நடிகை கஸ்தூரியிடம் ரசிகர் ஒருவர், “உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு இப்படி நேர்ந்தால் வழக்கு தொடர்வீர்களா” என்று கேட்டார். இதற்கு பதில் அளித்த கஸ்தூரி, ”எனக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டும் அல்ல, எனக்கே இப்படி பல முறை நடந்திருக்கிறது” என்று பதில் அளித்தார்.

 

தமிழ் சினிமாவில் சமீபத்தில் செக்ஸ் புகார் ஒலி கேட்பது நின்று போன நிலையில், நடிகை கஸ்தூரி அதை மீண்டும் ஒலிக்கச் செய்திருப்பதால், அவரை தொடர்ந்து மேலும் பல நடிகைகள் இது தொடர்பாக பேசுவார்கள், என்று ரசிகர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்.

Related News

6958

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery