பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் லொஸ்லியா. இலங்கையை சேர்ந்த தமிழ்ப் பெண்ணான இவர் தற்போது சில தமிழ்ப் படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இவருக்கு என்று தனி ரசிகர் வட்டம் இருப்பதால் இவரின் முதல் திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.
இந்த நிலையில், தமிழ் சினிமாவில் விரைவில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ள லொஸ்லியா குறித்து நெகட்டிவ் கமெண்ட் ஒன்று வைரலாக பரவி வருவது அவரது ரசிகர்களை அப்செட்டாக்கியுள்ளது. இதற்கு காரணம், லொஸ்லியா நடித்து ஒரு விளம்பரப் படம் தான்.
சென்னையை சேர்ந்த நிறுவனம் ஒன்று தயாரிக்கும் புதிய குளியல் சோப் விளம்பரப் படத்தில் லொஸ்லியா நடித்திருக்கிறார். தற்போது இந்த விளம்பரப் படம் யுடியுபில் வெளியாகியுள்ளது. விளம்பரத்தை பார்த்த லொஸ்லியா ரசிகர்கள் அவரை பாராட்டி வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
ஆனால், சில ரசிகர்கள் விளம்பரப் படத்தில் நடித்திருக்கும் லொஸ்லியாவின் நடிப்பை விமர்சித்துள்ளார்கள். ”சில நிமிடங்கள் மட்டுமே ஒளிபரப்பாகும் விளம்பரப் படத்திலேயே லொஸ்லியா சரியாக நடிக்காதது அப்பட்டமாக தெரியும் போது, முழு நீளத்திரைப்படத்தில் அவர் எப்படி நடித்திருப்பாரோ, மொத்தத்தில் அவர் சினிமாவில் நாயகியாக தேர மாட்டார், என்றே தெரிகிறது” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்கள்.
இதோ அந்த வீடியோ, நீங்களே சொல்லுங்க லொஸ்லியா தேருவாரா மாட்டாரா என்று,
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...
ழகரம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஜித்து மாதவன் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படமான ‘சூர்யா 47’ படப்பிடிப்பு நேற்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது...