விஜய், அஜித், தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் மற்றும் மாபெரும் வெற்றிப் படங்களை விநியோகம் செய்து வரும் ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் டி.முருகானந்தம், கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் 20 வருடங்களாக தனது வெற்றிப் பயணத்தை தமிழ் சினிமாவில் தொடர்ந்துக் கொண்டிருக்கிறார்.
ரசிகர்களின் பல்ஸ் அறிந்து படங்களை வெளியிட்டு வந்த அவர் முதல் முறையாக ‘குருதி ஆட்டம்’ படத்தின் மூலம் தயாரிப்பு துறையில் கால் பதித்துள்ளார். மாபெரும் வெற்றி பெற்ற ‘எட்டு தோட்டாக்கள்’ படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கும் இப்படத்தில் அதர்வா, பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார்கள். தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
இது குறித்து இயக்குநர் ஸ்ரீகணேஷ் கூறுகையில், “தயாரிப்பாளர் டி.முருகானந்தம் அவர்களுடனான எனது இந்த திரைப்பயணம், கற்பனைக்கும் அப்பாற்பட்டது. எங்கள் உறவு மிகவும் உணர்வுப்பூர்வமானது. எங்கள் உறவு ஒவ்வொரு முறையும் பலமானதாக நேர்மறை வழியில் உறுதிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. படத்தின் துவக்கதில் ’குருதி ஆட்டம்’ திரைக்கதை மீதும், என் மீதும் அவர் வைத்த அசைக்க முடியாத நம்பிக்கையை நான் என்றும் மறக்க மாட்டேன். அவரிடம் நான் திரைக்கதை சொல்ல, செல்லும் முன்னரே என் மீது மிகுந்த மதிப்பும், நம்பிக்கையும் கொண்டிருந்தார் அவர். 8 தோட்டாக்கள் பார்த்த பிறகு எனக்கு இப்படத்தை இயக்கும் வாய்ப்பை தந்தார். ஆனால் ஒரு தயாரிப்பாளராக எந்த ஒரு சிறு விசயத்திலும் தலையிடாமல், படைப்பில் எனக்கு முழு சுதந்திரம் தந்தார். இது எனக்கு பெரும் பொறுப்புணர்வை தந்தது. நான் படத்தை மேலும் மேலும் வெகு கவனமுடன் உருவாக்க இதுவே காரணம். மேலும் நடிகர் இப்படத்தின் நாயகன் அதர்வா ஒரு மிகச்சிறந்த நடிகர். எனக்கு தொடர்ந்து உற்சாகம் தந்து, நம்பிக்கையூட்டிக் கொண்டே இருந்தார். அவர் ஒரு சகோதரர் போல தான் என்னிடம் நடந்து கொண்டார். தற்போது படத்தின் இறுதிகட்ட பணிகள் மிகத்தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மிக விரைவில் படத்தின் இசை, டிரெய்லர், பட வெளியீடு குறித்த செய்திகள் அதிகாரப்பூர்வமாக வெளிவரும்.” என்றார்.
‘குருதி ஆட்டம்’ படத்தை தொடர்ந்து மேலும் பல படங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம், தமிழ் சினிமாவின் தயாரிப்பு, விநியோகம் மற்றும் வெளியீட்டு தளங்களில் கோலோச்சும் மிக முக்கிய நிறுவனமாக விளங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆறுபடை புரொடக்சன்ஸ் சார்பில் ஷைல்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வள்ளுவன்’...
மனோன்மணி கிரியேஷன்ஸ் சார்பில் பி லலிதா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாரணி’...
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் நாவல்களும் சிறுகதைகளும் திரைப்படங்களாக மாறிவரும் வரிசையில் தற்போது அவர் எழுதிய ’கசிவு’ என்கிற நாவல் அதே பெயரிலேயே திரைப்படமாக உருவாகியுள்ளது...