கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வரும் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. இதில் கலந்துக் கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் தற்போது ஓட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை போட்டியாளர்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியாகவில்லை.
அதே சமயம், நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்க இருப்பவர்களின் பெயர்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது. இவை அதிகாரப்பூர்வமான பட்டியல் இல்லை என்றாலும், இந்த பட்டியலில் இருப்பவர்கள் தான் பிக் பாஸ் 4-ன் இறுதி போட்டியாளர்கள் என்று நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த பட்டியலில் இருப்பவர்களுடன் மேலும் சில புதியவர்களும் இணைவார்கள் என்றும் கூறப்படுகிறது. பிக் பாஸில் போட்டியாளர்களாக பங்கேற்க நிகழ்ச்சி குழு பலரிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது. இதுவரை சுமார் 500 பிரபலங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.
இதோ ‘பிக் பாஸ் 4’ இறுதி பட்டியல்,
ஷிவானி
ரியோ ராஜ்
ஜித்தன் ரமேஷ்
அனு மோகன்
ஆஜீத்
கேப்ரியலா
சஞ்சனா சிங்
கிரண் ரதோட்
ரம்யா பாண்டியன்
சனம் ஷெட்டி
பாடகர் வேல்முருகன்
அபிநய ஸ்ரீ
இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவரும், அவரது உறவினருமான மதிமாறன் புகழேந்தி ’செல்ஃபி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்...
பிரபாஸ் நடித்துள்ள பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் ‘தி ராஜா சாப்’...
கவின் மற்றும் ஆண்ட்ரியா நடிப்பில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் தோல்வியை சந்தித்த ‘மாஸ்க்’ திரைப்படம் வரும் ஜனவரி 9 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் ஓளிபரப்பாக உள்ளது...