தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் பிரியா பவானி சங்கர். ‘மேயாத மான்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் தற்போது ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். ’பொம்மை’, ‘இந்தியன் 2’, ‘வான்’, ‘குருதி ஆட்டம்’ உள்ளிட்ட அரை டஜனுக்கு மேலான படங்களை கையில் வைத்துள்ளார்.
இந்த நிலையில், பிரியா பவானி சங்கர், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோ ஒருவரை காதலிப்பதாகவும், அவரை தான் விரைவில் திருமணம் செய்துக் கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியகியுள்ளது. இந்த தகவலை வேறு யாரும் வெளியிடவில்லை, பிரியா பவானி சங்கரும், அவரது கோலிவுட் காதலரும் தான் வெளியிட்டுள்ளார்கள்.
ஆம், தற்போது பல படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர் ‘பெல்லி ஜுப்புடு’ தெலுங்குப் படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடித்து வருகிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தில் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் நடிக்கிறார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.
இதற்கிடையே, நடிகர் ஹரிஷ் கல்யாண் பிரியா பவானி சங்கரும் தானும் காதலிப்பதாக சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட, அதற்கு பிரியா பவானி சங்கர், “லாக் டவுன் முடியும் வரை உன்னால் பொருமையாக இருக்க முடியாதா” என்று கேட்டுள்ளார். ஆக, தாங்கள் காதலிப்பதை இருவரும் ஒப்புக்கொள்ளும் வகையில் இந்த பதிவு இருக்கிறது.

இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலர் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். காரணம், பிரியா பவானி சங்கர் ஏற்கனவே குமரவேல் என்பவரை காதலித்து வருகிறார். ஆஸ்திரேலியாவில் காதலிக்கும் குமரவேல் காதலை அவர் கட் பண்ணிவிட்டு நடிகரை திருமணம் செய்ய இருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
ஆனால், உண்மையில் ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கரின் இந்த காதல் பதிவு வெறும் விளம்பரத்திற்காக மட்டுமே. ஆம், தங்களத் படத்தை விளம்பரப் படுத்தவே அவர்கள் இப்படி காதல் கிசுகிழுவை உருவாக்கியுள்ளனர்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...