கொரோனா பாதிப்பால் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டாலும், அவை தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. ஆனால், பொழுதுபோக்குத் துறைகள் மட்டும் இன்னும் புத்துயிர் பெறவில்லை. குறிப்பாக சினிமாத்துறை பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருப்பதோடு, எப்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும், என்பது யாருக்கும் தெரியாத புதிராகவே உள்ளது.
இதன் காரணமாக, சினிமாவை நம்பியிருந்த தொழிலாளர்கள் மட்டும் இன்றி சில முன்னணி நடிகர், நடிகைகள் கூட வேறு தொழிலில் ஈடுபட தொடங்கியுள்ளார்கள். அந்த வகையில், பிரபல நடிகை ஒருவர் வருமானத்திற்காக புது தொழில் ஒன்றை தொடங்கியுள்ளார்.
மலையாள திரைப்படங்களிலும், டிவி தொடர்களிலும் நடித்து வந்தவர் மஞ்சு பிள்ளை. படப்பிடிப்பு இல்லாதா காரணத்தால் வருமானம் இன்றி தவித்த இவர், தற்போது எருமை மாடு வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
தனது கணவரான ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவின் ஆலோசனையின்படி முரா என்ற 50 எருமை மாடுகளை வாங்கிய மஞ்சு பிள்ளை, திருவனந்தபுரம் அட்டிங்கல்லில் பண்ணை அமைத்து அவற்றை வளர்த்து வருகிறார். இதனால், மாடு மேய்ப்பது, தொழுவத்தில் கட்டுவது என அவர் மாடுகளுடன் இருக்கும் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...
‛மாயா’, ‘மாநகரம்’, ’மான்ஸ்டர்’, ‘டாணாக்காரன்’, ’இறுகப்பற்று’, ’பிளாக்’ என தொடர்ச்சியாக 6 வெற்றிப்படங்களுக்குப் பிறகு, பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் 7-வது திரைப்படத்தில் கதையின் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்...
முன்னணி ஓடிடி தளமான ஜீ5 தளத்தின் புதிய திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’...