கொரோனாவால் நிறுத்தப்பட்ட திரைப்பட படப்பிடிப்புகள் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. அரசு விதித்திருக்கும் சில கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்புகளை நடத்தி வரும் படக்குழுவினர் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் கோலிவுட் பணிகள் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
அந்த வகையில், சுமார் ஒரு டஜன் படங்களை கையில் வைத்திருக்கும் விமல், விரைவில் தனது படங்களை ஒவ்வொன்றாக வெளியிட தயாராகி வருவதோடு, நடிகர் விஜய் சேதுபதி கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள ‘குலசாமி’ படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 16 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. சரவண சக்தி இயக்கும் இப்படம் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகிறது. இப்படத்துடன் சுராஜ் உதவியாளர் ஆர்.துரை இயக்கத்தில் ’விடா முயற்சி விஸ்வரூப வெற்றி’ என்ற படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த புதிய படங்களின் படப்பிடிப்புகளை தொடங்குவதற்கு முன்பு, கொரோனா ஊரடங்கினால் பாதியில் நிறுத்தப்பட்ட ‘படவா’, ‘புரோக்கர்’, ‘மஞ்சள் குடை’, ‘லக்கி’ மற்றும் இயக்குநர் வேலு இயக்கத்தில் தலைப்பு வைக்காத படம், என்று கையில் இருக்கும் படங்களை விரைவாக முடித்துக் கொடுப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.
சற்குணம் இயக்கத்தில் ‘எங்க பாட்டன் சொத்து’, மாதேஷ் இயக்கத்தில் ‘சண்டக்காரி’, முத்துகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கன்னிராசி’ ஆகிய படங்கள் முடிவடைந்து ரிலீஸுக்கு தயார் நிலையில் உள்ளது.
மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த ‘கெணத்த காணோம்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...