Latest News :

ஓ.எம்.ஆர்-க்கு வரும் ஓவியாவுக்கு முதலாளி கொடுத்த உத்தரவாதம்!
Saturday September-23 2017

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் நடிகை பிரபலமானதால், அவர் நடித்த பழைய மலையாளப் பட்ங்களை தமிழில் டப் செய்து ரிலீஸ் செய்யும் முயற்சியில் சில நிறுவனங்கள் ஈடுபட்டு வரும் நிலையில், ஓவியாவை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்ய பல இயக்குநர்கள் முயன்று வருகிறார்கள். இதில் இயக்குநர் சுந்தர்.சி-க்கு தான் முதல் வெற்றி கிடைத்துள்ளது. தான் இயக்க இருக்கும் ‘கலகலப்பு-2’-வில் ஓவியாவை ஒப்பந்தம் செய்துவிட்டார்.

 

இதற்கிடையே, 100 நாட்கள் ஒப்பந்தபடி, எந்த மீடியாவுக்கும் பேட்டி கொடுக்காமல் தவிர்த்து வந்த ஓவியா, மீடியாக்கள் குன்பு தோன்ற போகும் நாளை ஆடை நிறுவனம் ஒன்று கூவி...கூவி...அறிவித்து வருகிறது.

 

ஆம், அதே தான். சரவணா ஸ்டோர் கடையின் புதிய கிளை திறக்கப்பட உள்ள ஓ.எம்.ஆர் சாலையில் தான் ஓவியா மீடியாக்கள் முன்பு தோன்றப்போகிறார். 

 

தற்போது ஓவியா தோன்றும் சரவணா ஸ்டோர் விளம்பரத்தில், அந்த நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு குறித்து அவர் அறிவிப்பது போல நடித்துள்ளார். இதோடு தன்னை விட்டுவிடுங்க, கடை திற்ப்புக்கெள்ளாம் கூப்பிடாதிங்க, என்று ஓவியா கூறினாராம். இருந்தாலும் கடையின் உரிமையாளரின் வற்புறுத்தலால் அவர் வர சம்மதித்திருப்பதோடு, அவரது சம்மதத்தை பெற கடை உரிமையாளர் உத்தரவாதம் ஒன்றை கொடுத்திருக்கிறார். அது என்னவென்றால், “வாரிக...ரிப்பனை கட் பண்ரீக...போரீக...அவ்வளவு தான்...மீடியாக்களுக்கு நோ பைட்” என்பது தானாம்

 

முதலாளியின் இந்த உத்தரவாதத்தை நம்பி தான் ஓவியா, ஓ.எம்.ஆர்-க்கு வருகிறாராம்.


Related News

699

'TN 2026' படம் யாரையும் புண்படுத்தாது! - தம்பி ராமையா விளக்கம்
Saturday April-04 2026

‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...

எங்கள் படம் பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும்! - ’பிரேக் ஃபாஸ்ட்’ (Break Fast) படக்குழு நம்பிக்கை
Saturday April-04 2026

’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...

’மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் இயக்குநரை பாராட்டிய செல்வராகவன்!
Friday April-03 2026

வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...

Recent Gallery