’ரேணிகுண்டா’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் சனுஷா. அப்படத்தை தொடர்ந்து ‘நந்தி’, ‘எத்தன்’ உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்தவருக்கு பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. இதனால், தங்கை மற்றும் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தவருக்கு, ஒரு கட்டத்தில் சிறு வேடங்களும் கிடைக்காமல் போனது.
தமிழில் வாய்ப்பில்லாமல் இருந்த சனுஷா மலையாள திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்த நிலையில், தற்கொலைக்கு முயன்றது தொடர்பான தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நடிகை சனுஷா, “கொரோனாவின் ஆரம்ப காலம் எனக்கு பெரிய அளவில் கஷ்டத்தை கொடுத்தது. சொந்த வாழ்க்கையிலும் தொழில் ரீதியாகவும் சங்கடங்கள் ஏற்பட்டன. எண்ணங்கள் என்னை பயமுறுத்தின.
இதனால் மன அழுத்தம் ஏற்பட்டது. பிரச்சினைகளை யாருடன் பகிர்ந்து கொள்வது என்றும் தெரியவில்லை. எனவே தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்தேன்.
அப்போது மிகவும் பாசம் வைத்துள்ள எனது தம்பியை பற்றி யோசித்தேன். நான் இறந்துபோனால் அவனால் தாங்கி கொள்ள முடியாது என்பதை உணர்ந்து தற்கொலை முயற்சியை கைவிட்டேன்.
பிறகு டாக்டரை சந்தித்து சிகிச்சை எடுத்தேன். அதன் பிறகு எனது மனதில் இருந்து சுமைகள் விலகி பழைய நிலைக்கு மாறினேன். என்னைப்போல் யாருக்கேனும் மன அழுத்தம் இருந்தால் அவர்கள் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதனை சொல்கிறேன்..!” என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...
‛மாயா’, ‘மாநகரம்’, ’மான்ஸ்டர்’, ‘டாணாக்காரன்’, ’இறுகப்பற்று’, ’பிளாக்’ என தொடர்ச்சியாக 6 வெற்றிப்படங்களுக்குப் பிறகு, பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் 7-வது திரைப்படத்தில் கதையின் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்...
முன்னணி ஓடிடி தளமான ஜீ5 தளத்தின் புதிய திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’...