Latest News :

தேர்தல் களத்தில் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் பெயர்!
Tuesday October-20 2020

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் ஏற்கனவே மூன்று அணிகள் போட்டியிட இருக்கும் நிலையில், பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் ஹீரோவாக நடித்த ‘தப்பாட்டம்’ படத்தின் தயாரிப்பாளர் ஆதம்பாவா தற்போது களத்தில் இறங்கியிருப்பதால், தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் மேலும் சூடுபிடித்துள்ளது.

 

‘தப்பாட்டம்’ மூலம் ஹீரோவாக அறிமுகமான பப்ளிக் ஸ்டார் துரை சுதாகருக்கு அப்படத்தை தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு வந்தாலும், நல்ல நடிகர் என்று பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக கதை தேர்வில் கவனம் செலுத்தியவர், நல்ல வேடமாக இருந்தால் ஹீரோவாக மட்டும் அல்லாமல், பிற வேடங்களிலும் நடிக்க ரெடி, என்று அறிவித்தார்.

 

அதன்படி, பல முன்னணி இயக்குநர்களின் படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். சற்குணம் இயக்கத்தில் ‘களவாணி 2’ வில் வித்தியாசமான வில்லன் வேடத்தில் நடித்து பாராட்டு பெற்றவர், வரலட்சுமி சரத்குமார் கதையின் நாயகியாக நடித்த ‘டேனி’ படத்தில் காவல் துறை அதிகரியாக, எதார்த்தமாக நடித்து பாராட்டுப் பெற்றார். மேலும், சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற விஜய் சேதுபதியின் ‘க/பெ ரணசிங்கம்’ படத்தில் சிறு வேடமாக இருந்தாலும், தன்னால் எந்த வேடத்திற்கும் பொருந்த முடியும், என்று நிரூபிக்கும் வகையில் நடித்திருந்தார்.

 

மேலும், பல முக்கிய இயக்குநர்களின் படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்து வரும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், கோலிவுட்டின் பார்வையை தன் பக்கம் திருப்பியிருப்பதோடு, தமிழ் சினிமாவில் முக்கிய நபராகவும் உருவெடுத்துள்ளார். சினிமாவில் மட்டும் இன்றி சமூக பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருபவர், தஞ்சை மக்களின் ரியல் ஹீரோவாகவும் வலம் வருகிறார்.

 

தஞ்சை மக்களின் ரியல் ஹீரோவாக இருந்த பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்தாலும், சினிமாவை சார்ந்த பலருக்கு பலவித உதவிகளை செய்து, திரையுலகினர் மனதிலும் ஹீரோவாக வலம் வருகிறார். அப்படிப்பட்டவரின் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ஒருவர் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுவது அனைவரது புருவத்தையும் உயர்த்தியிருப்பதோடு, தயாரிப்பாளர் சங்க தேர்தல் களத்தில் பப்ளிக் ஸ்டாரின் பெயரும் அடிபட தொடங்கியிருக்கிறது.

 

Public Star Durai Sudhakar

 

‘தப்பாட்டம்’ படத்தை தொடர்ந்து மேலும் ஒரு படத்தை தயாரித்து முடித்து வெளியிட தயாராக இருக்கும் ஆதம்பாவா, இயக்குநர் அமீர் ஹீரோவாக நடிக்கும் ‘நாற்காலி’ என்ற படத்தையும் தயாரித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

6997

ஆதரவற்றோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!
Wednesday November-19 2025

தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...

பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் படம் துவங்கியது!
Wednesday November-19 2025

‛மாயா’, ‘மாநகரம்’, ’மான்ஸ்டர்’, ‘டாணாக்காரன்’, ’இறுகப்பற்று’, ’பிளாக்’ என தொடர்ச்சியாக 6 வெற்றிப்படங்களுக்குப் பிறகு, பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் 7-வது திரைப்படத்தில் கதையின் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்...

திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’ ஜீ5-ல் நவம்பர் 28 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது!
Wednesday November-19 2025

முன்னணி ஓடிடி தளமான ஜீ5 தளத்தின் புதிய திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’...

Recent Gallery