’வேட்டையாடு விளையாடு’ படத்தின் மூலம் பாடகராக அறிமுகமான கிரிஷ், தொடர்ந்து பல படங்களில் பாட்டு பாடி முன்னணி பாடகராக உருவெடுத்தார். பிறகு கோ, அழகிய அசுரா உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர், நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பிறகு ஹீரோவாக நடிக்க அவர் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் தோல்வியில் முடிய, புதியவர்களின் வருகையால் பாட்டு பாடும் வாய்ப்பும் குறைந்துவிட்டது.
இதனை தொடர்ந்து இசையமைப்பாளர் அவதாரம் எடுத்த கிருஷ், பலரிடம் வாய்ப்பு கேட்டாலும், வாய்ப்பு மட்டும் கிடைத்தபாடில்லை. இதனால் துவண்டு போன கிரிஷை, தற்போது தூக்கிவிட்டிருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால்.
விஷ்ணு விஷால் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் படங்கள் தயாரித்து வரும் நடிகர் விஷ்ணு விஷால், தான் தயாரித்து நடிக்க உள்ள புதுப்படத்திற்கு கிரிஷை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.
படத்தின் ஹீரோயின் மற்றும் பிற நடிகர் நடிகைகள் உள்ளிட்ட விபரங்களை விஷ்ணு விஷால் விரைவில் வெளியிட உள்ளார்.
ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர்...
கிராண்ட் பிக்சர்ஸ் (Grand Pictures) நிறுவனத்தின் தயாரிப்பில், அப் 7 வெஞ்சர்ஸ் ஆதிராஜ் புருஷோத்தமன் இணைத் தயாரிப்பில், அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் ’அதர்ஸ்’...
ஆறுபடை புரொடக்சன்ஸ் சார்பில் ஷைல்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வள்ளுவன்’...