சீரியல்கள் மூலம் மக்களிடம் பிரபலமடைந்த தொலைக்காட்சிகளில் ஒன்று ஜீ தமிழ். வட இந்தியாவில் முன்னணியில் இருந்த ஜீ தொலைக்காட்சி, தமிழியில் சீரியல்கள் மூலம் முதன்மை சேனலாக உயர்ந்துள்ளது. குறிப்பாக ‘செம்பருத்தி’, ‘யாரடி நீ மோஹினி’ போன்ற சீரியல்கள் மூலம் ஜீ தமிழ் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடமும் பிடித்துள்ளது.
அதேபோல், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான தொடர் ‘இனிய இரு மலர்கள்’. இந்தி தொடரான இது தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டாலும், அசல் தமிழ் சீரியல் போலவே இருந்ததால் மக்களிடம் பிரபலமானது.
இந்த நிலையில், ‘இனிய இரு மலர்கள்’ தொடரின் நாயகனின் பாட்டியாக நடித்த நடிகை ஜரீனா ரோஷன், மாரடைப்பால் மரணம் அடைந்த தகவல் சீரியல் உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
54 வயதாகும் நடிகை ஜரீனா கடந்த சில நாட்களாகவே உடல்நல குறைவால் சிகிக்சை பெற்று வந்தார். தொடர் சிகிச்சையில் இருந்த அவர் திடீர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...