பிக் பாஸ் சீசன் 4-ன் போட்டியாளர்களில் முதல் எலிமினேஷனாக நடிகை ரேகா வெளியேற்றப்பட்டார். தற்போது இரண்டாவதாக வெளியேறப் போவது யார்? என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. இதற்காக விடை இன்னும் இரண்டு நாட்களில் தெரிந்துவிடும் என்றாலும், அதற்கு முன்னரே பிக் பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் குறித்த தகவல் கசிந்துள்ளது.
இதற்கிடையே, இந்த வார எலிமினேஷனுக்காக பிக் பாஸ் புது டாஸ்க் ஒன்று கொடுக்கிறார். அதில், சுரேஷ் சக்கரவர்த்தி சிக்கிக் கொள்வது போலவும், அதனால் அவர் இந்த வாரத்திற்கான எலிமினேஷன் பட்டியலில் இடம்பெறுவது போலவும், இன்றைய புரோமோ வெளியாகியுள்ளது.

ஆனால், உண்மையில் இந்த வாரம் பிக் பாஸில் இருந்து வெளியேறப் போவது ஆஜித் தான். பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை கண்டெண்ட் கொடுக்கும் போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவதில்லை. எந்தவித கண்டெண்டும் கொடுக்காமல் அமைதியாக இருப்பவர்களை தான் பிக் பாஸ் வெளியேற்றுவார். அதன்படி, தற்போதைய பிக் பாஸில் கண்டெண்ட் கொடுக்கும் முக்கிய போட்டியாளர்களில் சுரேஷ் சக்கரவர்த்தி இருக்கிறார். எனவே, அவரை உடனடியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற மாட்டார்கள்.
அதே சமயம், எந்தவித கண்டெண்டும் கொடுக்காமல் அமைதியாக இருப்பவர்கள் என்றால் அது, ஆஜித்தும், நடிகர் ஜித்தம் ரமேஷும் தான். அதேபோல் ஆஜித்துக்கு மக்களின் வாக்குகளும் குறைவாக கிடைத்திருப்பதால், அவர் தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார் என்றே கூறப்படுகிறது.
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...
‛மாயா’, ‘மாநகரம்’, ’மான்ஸ்டர்’, ‘டாணாக்காரன்’, ’இறுகப்பற்று’, ’பிளாக்’ என தொடர்ச்சியாக 6 வெற்றிப்படங்களுக்குப் பிறகு, பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் 7-வது திரைப்படத்தில் கதையின் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்...
முன்னணி ஓடிடி தளமான ஜீ5 தளத்தின் புதிய திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’...