மக்களிடம் பிரபலமாக இருக்கும் தொடர்களில் ஒன்று ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ‘யாரடி நீ மோஹினி’. இதில் கதையின் நாயகி வேடத்தில் நடித்திருக்கும் நட்சத்திராவுக்கு இணையான வேடமாக வில்லியின் வேடமும் அமைந்திருக்கும். இந்த வேடத்தில் சைத்ரா ரெட்டி என்பவர் நடித்திருக்கிறார்.
சில கன்னடம் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்திருக்கும் சைத்ரா ரெட்டி, ஏராளமான விளம்பரப் படங்களிலும் நடித்திருக்கிறார். ‘யாரடி நீ மோஹினி’ சீரியலில் வில்லியாக நடித்தாலும் தனக்கு தனி ரசிகர் வட்டத்தை கொண்டிருப்பவர் சைத்ரா ரெட்டி.
இந்த நிலையில், சைத்ரா ரெட்டி தனது காதலர் ராக்கேஷ் சாமலாவை திருமணம் செய்ய உள்ளார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடைபெற்றது. திருமணத்தின் தேதியை விரைவில் அறிவிக்க உள்ளனர். ராக்கேஷ் சாமலா ஏராளமான விளம்பர படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.
மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த ‘கெணத்த காணோம்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...