விஜய் சேதுபதி நடித்த ‘தர்மதுரை’, விஜய் ஆண்டனி நடித்த ‘சலீம்’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் ஸ்டுடியோ 9 ஆர்.கே.சுரேஷ். திரைப்படங்கள் தயாரிப்பு மட்டும் இன்றி சுமார் 50 க்கும் மேற்பட்ட படங்களை விநியோகம் செய்துள்ள இவரை, ‘தாரைதப்பட்டை’ படத்தில் இயக்குநர் பாலா வில்லனாக அறிமுகப்படுத்தினார்.
அப்படத்தில் நடிப்பால் அனைவரையும் கவர்ந்த ஆர்.கே.சுரேஷ், விஷாலின் ‘மருது’ படத்தில் வில்லனாக நடித்து மிரட்ட, விக்ரமின் ‘ஸ்கெட்ச்’, உதயநிதியுடன் ஒரு படம், ‘ஹர ஹர மகாதேவகி’ என்று கோடம்பாக்கத்தின் நம்பர் ஒன் வில்லன் நடிகரானதோடு, ‘பில்லா பாண்டி’, ‘வேட்டை நாய்’, ‘தனிமுகன்’ உள்ளிட்ட 7 படங்களில் ஹீரோவாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், இன்று பத்திரிகையாளரை சந்தித்து தனக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதையும், தான் நடித்துக் கொண்டிருக்கும் படங்கள் குறித்தும் பேசிய ஆர்.கே.சுரேஷ், கொஞ்சம் அரசியல் பற்றி பேசி, பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தனக்கும் அரசியலில் ஈடுபட விருப்பம் உள்ளதாக தெரிவித்த ஆர்.கே.சுரேஷ், ரஜினி சாரை நல்ல நடிகராக எனக்கு ரொம்ப பிடிக்கும். கடந்த 25 ஆண்டுகளாக அவரை பார்த்து வளர்ந்தவன் நான். ஆனால், அரசியல் என்று வந்தால், ரஜினியை காட்டிலும் கமல் தான் பெஸ்ட். அவர் அரசியல்லு வந்தால் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது, என்றவர், கமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பித்தால் முதல் ஆளாக அவரது கட்சியின் நான் சேர்ந்துவிடுவேன், என்றும் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தின் சிஸ்டம் சரியில்லை என்று ரஜினிகாந்த் கூறியது தவறானது, இங்கு சிஸ்டம் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது, ஆனால் அதில் சில ஓட்டைகள் ஏற்பட்டுள்ளது அவ்வளவு தான், அதை அடைத்துவிட்டால் அனைத்தும் சரியாகிவிடும், என்றும் கூறினார்.
ஏற்கனவே, அரசியலுக்கு கமல் மற்றும் ரஜினி இருவரும் வந்தால், தனது ஆதரவு கமலுக்கு தான் என்று நடிகர் விஷால் கூறியிருந்த நிலையில், தற்போது நடிகர் ஆர்.கே.சுரேஷும் அரசியலில் கமலுக்கு ஆதரவு என வெளிப்படையாக கூறியிருப்பது, ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால், அவர் இருக்கும் திரையுலகமே அவரை ஆதரிக்காது, என்பது புரிகிறது.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...