தமிழ் சினிமாவிம் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், அரசியல் மீது அதிகம் ஆர்வம் கொண்டவராக தன்னை காட்டிகொண்டு வருகிறார். அவரை விட அவரது தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய் அரசியலில் ஈடுபட வேண்டும், என்பதில் பேரார்வமாக இருக்கிறார்.
இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு, எஸ்.ஏ.சந்திரசேகர் பா.ஜ.க-வில் இணையப் போவதாக தகவல் வெளியானது. இது குறித்து விளக்கம் அளித்த எஸ்.ஏ.சந்திரசேகர், தான் எந்த அரசியல் கட்சியிலும் இணையப் போவதில்லை, நேரம் வரும் போது நானும், விஜயும் அரசியலுக்கு வருவோம், அப்படி வரும்போது விஜயின் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும், என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், விஜய் தனது பனையூர் இல்லத்தில் தனது மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளை திடீரென்று சந்தித்து பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே தனது மக்கள் இயக்கம் மூலம் தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் விஜய், மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியைப் போன்று கட்டமைத்திருப்பதாக கூறப்பட்டது. தற்போது மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளை சந்தித்து பேசியிருப்பதால், அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது விஜய், அரசியல் கட்சி தொடங்கி, அரசியலில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
பார்ப்போம், விஜய் அரசியலுக்கு வருகிறாரா, அல்லது ரஜினியைப் போல பூச்சாண்டி காட்டுகிறாரா என்று.
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வரும் சித்ரா லட்சுமணன், ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கி நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமான திரை கலைஞர்களை நேர்காணல் கண்டு பல அறிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்...