வெள்ளித்திரையில் முன்னணி நாயகியாக வலம் வந்த ராதிகா தொலைக்காட்சி தொடர்களிலும் முன்னணி இருந்தார். அவரது ராடான் தயாரிக்கும் சீரியல்கள் பல மக்களிடம் பிரபலமானவைகளாக இருந்தது. அதிலும், அவர் தயாரித்து நடித்த ‘சித்தி’ தொடர் சீரியல் உலகில் புது புரட்சியை ஏற்படுத்தியது, என்றால் மிகையாகாது.
இப்படி சீரியல் உலகில் ராணியாக திகழ்ந்த ராதிகா, சமீபகாலமாக அதே சீரியல் உலகில் பல சறுக்கல்களை சந்தித்து வருகிறார். அவர் தயாரித்த சில சீரியல்கள் தொடர்ந்து மக்களிடம் எடுபடாமல் போனது. இதையடுத்து, ‘சித்தி 2’ என்ற தலைப்பில் புது சீரியல் ஒன்றை தயாரித்து ராதிகா நடித்து வந்தார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலுக்கும் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆம், ராதிகாவின் ‘சித்தி 2’ சீரியலை சன் தொலைக்காட்சி நிறுத்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு காரணம் ராதிகாவின் சர்ச்சையான கருத்து தான், என்றும் கூறப்படுகிறது.
அதாவது, இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்த போது, ராதிகா விஜய் சேதுபதிக்கு ஆதரவாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், முரளிதரன் வாழ்க்கை படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதியை கேள்வி கேட்பவர்கள், அவர் ஐபிஎல் அணியான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பயிற்சியாளராக முத்தையா முரளிதரன் இருப்பதை, ஏன் கேட்கவில்லை, என்று தெரிவித்திருந்தார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உரிமையாளரான கலாநிதிமாறன், ராதிகாவின் ட்விட் பதிவால் கடுப்பாகிவிட்டாராம். இதையடுத்து ‘சித்தி 2’ சீரியலை நிறுத்தும்படி சன் தொலைக்காட்சிக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். எனவே, சன் நிறுவனம் ராதிகாவிடம் ‘சித்தி 2’சீரியலை நிறுத்தும்படி கூறிவிட்டார்களாம்.
இதனால், விரைவில் ராதிகாவின் ‘சித்தி 2’ நிறுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...
எம்.பி.என் மூவிஸ் சார்பில் எம்...
பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி, இறுதி போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது...