தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகளோடு சில திரைப்படங்கள் வெளியாகின்றன. அந்த வகையில், ஒரே ஷாட்டில் முழு திரைப்படத்தையும் எடுப்பதில் சிலர் ஈடுபட்டுள்ளனர். அந்த வரியில், ‘டிராமா’ என்ற திரைப்படமும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
’பொல்லாதவன்’ கிஷோர், நகுலன் வின்செண்ட், ஜெய்பாலா, சார்லி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படம் ஒரே ஷாட்டில், 8 மணி நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 180 நாட்கள் நடிப்பு மற்றும் தொழில்நுட்ப பயிற்சியை மேற்கொண்ட பிறகே படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
படம் குறித்து இயக்குநர் அஜு கூறுகையில், “கிஷோர் , சார்லி போன்ற அனுபவமிக்க நடிகர்கள் இப்படிப்பட்ட சவாலான படப்பிடிப்பிற்கு ஒத்துழைத்து நடித்ததே இந்த படம் வெற்றிகரமாக வந்திருக்கிறது. நாங்கள் நினைத்ததைவிட பிரமாதமாக வந்திருக்கிறது. ஒரே ஷாட்டில் படமாக்குவது எளிதல்ல, அதுவும் ஒரு கமர்சியல் படத்தில் இந்த முயற்சி பெரும் சவாலானது. எனது குழுவுனரின் முழு ஒத்துழைப்பாலும், நடிகர்களின் முழு அற்பணிப்பாலும் இந்த முயற்சி மிக சிறப்பாக வந்திருக்கிறது. படம் பார்ப்பவர்களுக்கு இது புது அனுபவத்தைத்தரும்.” என்றார்.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...
நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி, ஜி...
எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி என்ற தலைப்பில் பிரபல மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு, ஆண்டு தோறும் சிறந்த பட தயாரிப்பாளர், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறார்...