ஆயா வட சுட்ட கதை, போல் வனிதாவின் திருமணமும் அதைச் சார்ந்த தகவல்களும் என்னதான் ஓல்டானாலும், வற்றுக்கு சமூக வலைதளங்களில் பெரிய மவுசு உண்டு. அந்த வகையில், பீட்டர் பாலுக்கு பிறகு வனிதா யாருடன் இணையப் போகிறார்? என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.
ரசிகர்களின் இப்படிப்பட்ட எதிர்ப்பார்ப்புக்கு இவ்வளவு சீக்கிரம் விடை கிடைத்திருப்பது பெரும் ஆச்சர்யம். ஆம், வனிதா அடுத்ததாக யாருடன் இணையப்போகிறார், என்பதை நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
வனிதாவுக்கு ஒரு பிரச்சினை என்றால், கஸ்தூரிக்கு அல்வா சாப்பிடுவது போல. அதை வைத்து அவர் பங்கமாக கலாய்க்க தொடங்கிவிடுவார். அதன்படி, வனிதா பி.ஜே.பி-யில் இணையப் போவதாக வெளியான தகவலை கலாய்த்த கஸ்தூரி, பீட்டர் பாலுக்கு பிறகு வனிதா எந்த கணவருடன் இணையப் போகிறார், என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால், அவர் கணவருடன் இணையாமல் கட்சியில் இணைகிறார், என்று தெரிவித்துள்ளார்.

அது மட்டும் அல்ல, நோட்டோவை விட குறைவான கட்சிக்கு வனிதாவின் பிரச்சாரம் அதிகமான வாக்குகளைப் பெற்று தரும் என்று அவர்கள் நம்புகிறார்கள் போல, ஆனால், வனிதாவுக்கு பின்னால் நிறைய பேர் இருப்பதாக, அவர்கள் தவறாக நினைத்துக் கொண்டார்கள், என்றும் தெரிவித்துள்ளார்.
எஸ்.வி.எம் ஸ்டுடியோஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள படம் ‘த்ரிகண்டா’...
தமிழ்நாட்டு அரசியல் மற்றும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமையாக திகழ்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆர்...
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...