காதலிக்க மறுத்த பெண் கொலை, திருமணத்திற்கு மறுத்த பெண் கொலை, என்று காதல் விவகாரத்தில் பெண்களுக்கு எதிரான பல குற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில், பிரபல சீரியல் நடிகை திருமணத்திற்கு மறுத்ததால் கத்தியால் குத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த சின்னத்திரை நடிகை மால்வி மல்கோத்ரா, பல இந்தி சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் நேற்று இரவு தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, இவரது காரை மறித்த யோகேஷ் என்பவர், தன்னை ஒரு தயாரிப்பாளர் என்று கூறியதோடு, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் வற்புறுத்தியுள்ளார்.

இதற்கு நடிகை மால்வி மல்கோத்ரா மறுப்பு தெரிவிக்க, உடனே தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மல்கோத்ராவின் வயிறு மற்றும் கையில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். படுகாயம் அடைந்த மால்வி மல்கோத்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், தலைமறைவாக இருக்கும் யோகேஷை தேடி வருகிறார்கள்.
பெப்பர் மின்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகாஷ் அமையா ஜெயின் தயாரிப்பில் ஜெயராம்,விஜய் சேதுபதி, நகுல், ஆத்மிகா, ரித்திகா சென் நடிப்பில் சனில் இயக்கியுள்ள திரைப்படம் காதல் கதை சொல்லவா...
மனோ கிரியேஷன்ஸ் சார்பில் ஏ...
கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவரும், திமுக'வில் தன்னை இணைத்துகொண்டு அரசியல் களத்தில் கால் பதித்துள்ளவரும், நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளருமான பி டி செல்வகுமார் அவர்களுக்கு திரையுலகம் சார்பில் கடந்த 23...