கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களின் பேவரைட் நிகழ்ச்சியாக உள்ளது. இதன் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களாக கலந்துக் கொண்ட டிவி நடிகர் கவினுக்கும், இலங்கை தமிழ்ப் பெண் லொஸ்லியாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்த காதல் தான் மூன்றாவது சீசனையே மிகவும் சுவாரஸ்யமாக நகர்த்திச் சென்றது.
ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு கவினும், லொஸ்லியாவும் தங்களது காதல் குறித்து எதுவும் பேசவில்லை. மேலும், அவர் அவர் வேலையில் மும்முரம் காட்ட தொடங்கி விட்டார்கள். கவின் படங்களில் ஹீரோவாக நடிக்க தொடங்கியது போல, லொஸ்லியாவும் திரைப்படங்களில் ஹீரோயினாக நடிக்க தொடங்கினார்.
இந்த நிலையில், லொஸ்லியாவுக்கு அவரது விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லொஸ்லியாவின் தந்தை கனடாவில் பணிபுரிந்து வருகிறார். அவருடன் கனடாவில் பணிபுரியும் நண்பரின் மகனை தான் லொஸ்லியாவுக்காக அவர் பார்த்துள்ளாராம்.
லொஸ்லியாவின் திருமணம் பற்றிய ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பதாகவும், விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எஸ்.வி.எம் ஸ்டுடியோஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள படம் ‘த்ரிகண்டா’...
தமிழ்நாட்டு அரசியல் மற்றும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமையாக திகழ்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆர்...
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...