கடந்த விழாயக்கிழமை அதிகாலை 2 மணி அளவில் மது போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நடிகர் ஜெய்யை அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் கைது செய்தனர். பிறகு அவர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த விபத்தில் ஜெய்க்கும், அவருடன் காரில் இருந்த நடிகர் பிரேம்ஜிக்கும் எந்த விபத்தும் ஏற்பட வில்லை என்றாலும், ஜெய்யின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் முனைப்பில் போலீஸ் இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்பாக, இரண்டு முறை மது குடித்து வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக அபராதம் கட்டியுள்ள ஜெய், தற்போது மூன்றாவது முறையாக மது குடித்து வாககன் ஓட்டியிருப்பதால் அவரது ஓட்டுநர் உரிமைத்தை ரத்து செய்யும்படி, அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார், திருவான்மியூரா ஆர்.டி.ஓ-வுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
இந்த நிலையில், போலீசிடம் ஜெய் பிடிபட்ட போது அவரிடம் அசல் ஓட்டுநர் உரிமம் இல்லையாம். அதேபோல், காரின் ஆர்.சி புத்தகம் இல்லாததோடு, இன்சூரன்ஸும் புதுப்பிக்கப்படாததால், காரின் நம்பர் பிளேட்டும் விதிமுறைகளை மீறி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அடையாறு போக்குவரத்து போலீசார் ஜெய் மீது தனியாக புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்ய உள்ளனர்.]
அப்படி, போலீசார் புதிய வழக்கு பதிவு செய்து, அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் போது, நடிகர் ஜெய்க்கு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...