கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. வெறும் மோதல்கள் மட்டுமே இருந்த நிகழ்ச்சியில் தற்போது அரசியல் பேசுவதோடு, தனி தனி அணிகளாகவும் பிரிந்து சண்டை போட தொடங்கியுள்ளார்கள். அதேபோல், காதல் ஜோடியும் உருவாகி வருகிறது.
இன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒரு போட்டியாளர் வெளியேறப் போகிறார். அவர் யார்? என்று தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள். அந்த நபர் வேல்முருகன் தான் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வேல்முருகன் வெளியேறிய பிறகு பாடகி சுசித்ரா புதிய போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் களம் இறங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று வெளியேறப் போகும் போட்டியாளர் பற்றி புரோமோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், நாம் ஏற்கனவே வெளியிட்ட செய்தியை போல வேல்முருகன் தான் வெளியேறுவது போல தெரிகிறது. அதே சமயம், ஆஜித்தும் வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதோ அந்த புரோமோ,
‛மாயா’, ‘மாநகரம்’, ’மான்ஸ்டர்’, ‘டாணாக்காரன்’, ’இறுகப்பற்று’, ’பிளாக்’ என தொடர்ச்சியாக 6 வெற்றிப்படங்களுக்குப் பிறகு, பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் 7-வது திரைப்படத்தில் கதையின் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்...
முன்னணி ஓடிடி தளமான ஜீ5 தளத்தின் புதிய திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’...
ஸ்வர்க்கசித்ரா அப்பச்சன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் விஜய்-சூர்யா இணைந்து நடித்து 2001ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் 24 ஆண்டுகளுக்கு பின்னர் 4K தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் 21ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் B...