சுஷாந்த் சிங், வடிவேலு பாலாஜி, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என்று திரையுலகில் மரணங்கள் தொடர்வது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர் மரணம் அடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘விசிரி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் நவின் சங்கர். பல ஆல்பங்களுக்கும், விளம்பர படங்களுக்கும் இசையமைத்து வந்த இவர் நேற்று இரவு திடீரென்று உயிரிழந்துள்ளார்.
நவின் சங்கருக்கு திடீரென்று உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். ஆனால், அவரது மூளையில் ரத்தம் உறைந்து அவர் மரணமடைந்துவிட்டார்.
இசையமைப்பாளர் நவின் சங்கரின் மரணம் செய்தி தமிழ் சினிமாவில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த ‘கெணத்த காணோம்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...