Latest News :

‘சூரரைப் போற்று’ ஏன் பார்க்க வேண்டும்? - சூர்யா பதில்
Monday November-02 2020

பெரிதும் எதிர்பார்க்கப்படும் சூரரைப் போற்று தமிழ் திரைப்படத்தின் ட்ரெய்லரை அமேசான் ப்ரைம் வீடியோ சமீபத்தில் வெளியிட்டது. சூரரைப் போற்று தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. அமேசான் கிரேட் இந்தியா ஃபெஸ்டிவலின் ஒரு அங்கமாக, 200க்கும் அதிகமான நாடுகளில் உள்ள அனைத்து ப்ரைம் சந்தாதாரர்களுக்காக இப்படம் வரும் நவம்பர் 12 முதல் வெளியாகிறது.

 

ஆக்‌ஷன் டிராமா திரைப்படமான சூரரைப் போற்று படத்தில் சூர்யா, மோகன் பாபு, பரேஷ் ராவல் மற்றும் அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இது குறைந்த விலை விமான நிறுவனமான ஏர் டெக்கான் நிறுவனரும், ஓய்வுபெற்ற ராணுவ கேப்டனுமான, கேப்டன். ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை பற்றிய கற்பனை வடிவமாகும். 

 

படத்தின் நாயகனான சூர்யா, இப்படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, “எனது முந்தைய கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையானவை. ஆனால் இந்த கதாபாத்திரம், தனது வாழ்க்கையை வாழ்ந்த ஒரு பணிவான மனிதரைப் பற்றியது. அவர் தான் கண்ட கனவைப் பெரிதாகச் சாதித்த ஒரு உண்மையான ஹீரோ. ஒரு விமான நிறுவன முதலாளியாக ஆவதற்கு இந்தியாவில் இருக்கும் அனைத்து சிக்கல்களையும் அவர் கடக்க வேண்டியிருந்தது. அது எளிமையான காரியம் அல்ல. உண்மையில் அவர் இந்தியாவின் முகத்தை மாற்றினார்” என்றார்.

 

மேலும் அவர் கூறும்போது, “தனது கனவுகளை தானே அடைந்து அதை பெரும் சாதனையாக மாற்றிய ஒரு நபரைப் பற்றிய கதையை நாங்கள் சொல்லியிருக்கிறோம். எந்தவித பின்புலத்திலும் பிறந்திருக்கும் ஒவ்வொரு சராசரி மனிதனுக்கும் இது ஒரு உத்வேகம்.  உங்கள் கனவுகளை நிறைவேற்ற முடியாமல் போவதற்கு எந்தவித காரணமும் இருக்க முடியாது. இது போன்ற கதைகள் பொதுமக்களுடன் பகிரப்படுவது முக்கியம். அதை நிறைவேற்ற எல்லா விதமான சவால்களை எதிர்த்து உறுதியுடன் போராட வேண்டும். இதனால் தான் இந்த கதையை நாங்கள் சொல்ல விரும்புகிறோம்” என்றார்.

 

நிச்சயமாக இந்த கதை ஒரு ப்ளாக்பஸ்டர் பயணமாக இருக்கும், இதை யாரும் தவற விடவே கூடாது. சுதா கொங்கரா இயக்கியுள்ள சூரரைப் போற்று திரைப்படத்தை சூர்யாவின் 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் மற்றும் குனீத் மோங்காவின் சிக்யா எண்டெர்டெய்ன்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

Related News

7033

பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் படம் துவங்கியது!
Wednesday November-19 2025

‛மாயா’, ‘மாநகரம்’, ’மான்ஸ்டர்’, ‘டாணாக்காரன்’, ’இறுகப்பற்று’, ’பிளாக்’ என தொடர்ச்சியாக 6 வெற்றிப்படங்களுக்குப் பிறகு, பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் 7-வது திரைப்படத்தில் கதையின் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்...

திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’ ஜீ5-ல் நவம்பர் 28 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது!
Wednesday November-19 2025

முன்னணி ஓடிடி தளமான ஜீ5 தளத்தின் புதிய திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’...

மீண்டும் வெளியாகும் விஜய்-சூர்யா நடித்த 'ப்ரண்ட்ஸ்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா!
Wednesday November-19 2025

ஸ்வர்க்கசித்ரா அப்பச்சன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் விஜய்-சூர்யா இணைந்து நடித்து 2001ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம்  24 ஆண்டுகளுக்கு பின்னர் 4K தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் 21ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் B...

Recent Gallery