கமல்ஹாசனை அப்செட்டாக்கிய ‘பிக் பாஸ் 4’!
Tuesday November-03 2020

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே நம்பர் ஒன் நிகழ்ச்சியாக பிக் பாஸ் திகழ்கிறது. மூன்று சீசன்களை வெற்றிகரமாக கடந்து தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு சீசனின் போது விஜய் தொலைக்காட்சியின் டிஆர்பி ரேட்டிங்கும் உயர்வடைந்து வருகிறது. இதனால், தான் விஜய் தொலைக்காட்சியும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தங்களது மிக முக்கியமான நிகழ்ச்சியாக கருதி, கொரோனா காலத்திலும் ஒளிபரப்பு செய்து வருகிறது.

 

பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களிடம் சென்றடைந்ததற்கு அந்நிகழ்ச்சியில் இருக்கும் சுவாரஸ்யம் மட்டும் இன்றி, நடிகர் கமல்ஹாசனும் தான். அவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் முறையும் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால், தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பங்கேற்கும் வார இறுதி நாட்களில், வழக்கமான ரசிகர்களை விட அதிகமானவர்கள் பார்ப்பார்கள். அன்றைய தினம் விஜய் தொலைக்காட்சியின் டி.ஆர்.பி ரேட்டிங்கும் வழக்கத்தை விட அதிகரிக்கும்.

 

அதாவது, பிக் பாஸ் நிகழ்ச்சியின் வார நாட்களில் 8 முதல் 10 புள்ளிகள் கிடைத்தால், கமல்ஹாசன் இடம்பெறும் வார இறுதி நாட்களில், 11 முதல் 13 புள்ளிகள் கிடைக்கும். பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக குறிப்பிட்ட ரசிகர்கள் இருந்தாலும், தனக்காகவும் இந்த நிகழ்ச்சியை பார்க்க சிலர் இருக்கிறார்கள், என்று கமல்ஹாசன் மகிழ்ச்சியடைந்தாராம்.

 

ஆனால், தற்போதை பிக் பாஸ் 4 போட்டியின் புள்ளி விரவரம் சமீபத்தில் வெளியாக, அது கமல்ஹாசனை அப்செட்டாக்கி விட்டதாம். காரணம், மூன்று சீசன்களில் கமல்ஹாசனுக்கு இருந்த வரவேற்பு இந்த நான்காவது சீசனில் குறைந்துவிட்டதாம். அதாவது, கமல்ஹாசன் இடம்பெறும் வார இறுதி நாட்கள் நிகழ்ச்சிக்கு 8 முதல் 9 புள்ளிகள் தான் கிடைக்கிறதாம். அதே சமயம், வார நாட்களில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியே 10 புள்ளிகளை பெற்றுவிடுகிறதாம்.

 

இந்த பின்னடைவை சரி செய்வதற்காக தான் கடந்த வாரம் பிக் பாஸில் அரசியல் பேசிய கமல்ஹாசன், தனது கட்சியின் சின்னத்தையும் பயன்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

Related News

7036

’கெணத்த காணோம்’ வெற்றியால் யோகி பாபு எடுத்த புது முடிவு!
Friday March-20 2026

மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த ‘கெணத்த காணோம்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

Recent Gallery