Latest News :

ஹீரோவாக களம் இறங்கும் காமெடி நடிகர் முனீஸ்காந்த்
Friday November-06 2020

ஹீரோவான காமெடி நடிகர்கள் பட்டியலில் முனீஸ்காந்தும் இடம் பிடித்துவிட்டார். காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் முனீஸ்காந்த், ‘மிடில் கிளாஸ்’ என்ற படத்தில் கதையின் நாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார். இவருடன் ‘விஜய் டிவி’ ராமரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

 

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் அனைவருமே வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறோம். படங்களில் கூட வேகம், விறுவிறுப்பு என்ற சூழல் வந்தவுடன் குடும்ப பாங்கான படங்களின் வருகை என்பது குறைந்துவிட்டது. அதிலும் குடும்ப படங்களில் முழுக்க காமெடி முன்னிலைப்படுத்தியது குறைந்தே விட்டது என்று கூறலாம். ஏனென்றால் குடும்பங்களில் தான் அவ்வளவு காமெடி கலாட்டாக்கள் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு கலகலப்பான குடும்ப காமெடிப் படமாக இப்படம் உருவாக உள்ளது.

 

'அறம்' தொடங்கி சமீபத்திய 'க/பெ ரணசிங்கம்' வரை எப்போதுமே புதுமையான நம்பிக்கைக்குரிய கதைகளுக்குக் கைகொடுக்கும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் ராஜேஷ் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளார். அவருடன் இணைந்து 'டோரா' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான தாஸ் ராமசாமியின் கெளஷ்துப் எண்டர்டையின்மெண்ட் நிறுவனமும் தயாரிக்கிறது. எதார்த்தத்துடன் கூடிய கலகலப்பான இந்தக் கதை எழுதி, இயக்கவுள்ளார் கிஷோர் எம்.ராமலிங்கம். இவர் 'களவாணி' படத்தின் உதவி இயக்குநராக பணிபுரிந்தது மட்டுமன்றி 'இது வேதாளம் சொல்லும் கதை' மற்றும் 'பூமிகா' ஆகிய படங்களில் இணை இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார்.

 

Middle Class

 

நல்ல கதைக்கு, வலுவான தொழில்நுட்ப கலைஞர்கள் அமைந்துவிட்டால் வெற்றி உறுதி என்பார்கள். அப்படி பல்வேறு படங்களுக்கு தனது ஒளிப்பதிவால் அழகூட்டிய ஆர்வி ஒளிப்பதிவாளராகவும் பணிபுரியவுள்ளார். இசையமைப்பாளராக சந்தோஷ் தயாநிதி, எடிட்டராக ஆனந்த் ஜெரால்டின், கலை இயக்குநராக ஏ.ஆர்.மோகன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். தற்போது படப்பிடிப்பு தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

 

முனீஸ்காந்த், ராமர் ஆகியோருடன் மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்க உள்ளனர். தற்போது நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தீபாவளிக்கு பிறகு தொடங்க உள்ளது.

 

 

Related News

7041

‘டியர் ரதி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Sunday December-14 2025

'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த  இன்சாம்னியாக்ஸ் ட்ரீம்  கிரியேஷன்ஸ் எல்...

சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு ரூ.95 லட்சம் நிதி வழங்கிய தமிழக அரசு!
Friday December-12 2025

தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...

தி.மு.க வில் இணைந்தார் ‘புலி’ பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார்!
Thursday December-11 2025

திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...

Recent Gallery