தமிழகத்தில் மட்டும் இன்றி இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கொடைக்கானல் யூனிலிவர் வீடியோவை இயக்கியவர் ரதீந்திரன் ஆர்.பிரசாத். இவர் இயக்கும் முதல் தமிழ்ப் படம் தான் ‘இது வேதாளம் சொல்லும் கதை’.
இப்படத்தின் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் பாலிவுட் நடிகர் அபய் தியோல் நடித்திருப்பதன் மூலம், அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். அதேபோல் பிரபல ஹாலிவுட் நடிகர் ஒருவரும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
மேலும், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 8 முக்கிய கதாபாத்திரங்களாக அஸ்வின், குரு சோமசுந்தரம், ஐஸ்வர்யா ராஜேஷ், கிரெக், அக்னி, லெஸ்லி, கனிகா, அபய் தியோல் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இந்த 8 கதாபாத்திரங்கள் இடம்பெற்றிருக்கும் தனி தனி போஸ்டரை, இயக்குநர்கள் கெளதம் மேனன், வெங்கட் பிரபு, ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட 8 இயக்குநர்கள் வெளியிட, ‘இது வேதாளம் சொல்லும் கதை’ படத்தின் டீசரை நடிகர் விஜய் சேதுபதி, தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி...
ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர்...
கிராண்ட் பிக்சர்ஸ் (Grand Pictures) நிறுவனத்தின் தயாரிப்பில், அப் 7 வெஞ்சர்ஸ் ஆதிராஜ் புருஷோத்தமன் இணைத் தயாரிப்பில், அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் ’அதர்ஸ்’...