லண்டன், பூடான் மற்றும் நியூயார்க்கில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்ற ‘பச்சை விளக்கு’ திரைப்படம் ஒடிடி-யில் வெளியாகிறது.
மணிமேகலை தயாரிப்பில் அறிமுக இயக்குநர் டாக்டர்.மாறன் இயக்கி ஹீரோவாக நடித்திருக்கும் ‘பச்சை விளக்கு’ சாலை விபத்துக்களை தடுப்பதற்கான சமூக விழிப்புணர்வு படமாகவும், காதல் மோகத்தால் வாழ்க்கையை தொலைக்கும் பெண்களுக்கான எச்சரிக்கை படமாகவும் பெரும் பாராட்டுக்களுடன், பல விருதுகளையும் வென்றுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் உருவாக்கப்பட்ட OTTMOVIE App மற்றும் www.ottmovie.in ஆகிய இணையத்தில் ‘பச்சை விளக்கு’ படம் தீபாவளி முதல் வெளியாக உள்ளது. இதன் மூலம், கூகுல் பிளே ஸ்டோரில் OTTMOVIE அஃப்பை டவுன்லோடு செய்து வீட்டில் இருந்தபடியே பாதுகாப்புடன் ‘பச்சை விளக்கு’ படத்தை பார்த்து ரசிக்கலாம். அத்துடன், www.ottmovie.in என்ற இணையத்தளம் மூலமாகவும் படத்தை பார்க்கலாம்.
காதல் கலந்த சமூக சிந்தனை உள்ள கமர்ஷியல் படமான ‘பச்சை விளக்கு’ படம் குறித்து இயக்குநர் மாறன் கூறுகையில், “பிரதமர் மோடி அவர்கள் ‘மன்கிபாத்’ நிகழ்ச்சி மூலம் பேசிய போது, பெண்களுக்கு எதிரான அநீதி மற்றும் விபத்து குறித்து கண்கலங்கினார். அப்போதே, ‘பச்சை விளக்கு’ மாதிரியான ஒரு படத்தை இயக்குவது என முடிவு செய்துவிட்டேன். இப்படம் சர்வதேச அளவில் 10 விருதுகளை வென்றிருப்பது எங்கள் படக்குழுவுக்கு மட்டும் அல்ல, ஒட்டு மொத்த தமிழ் சினிமாவுக்கே பெருமை.
இந்திய தயாரிப்புகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற பிரதமரின் சிந்தனைக்கு ஏற்ப, இந்தியாவில் உருவாக்கப்பட்ட, அஃப்பான OTTMOVIE App மற்றும் www.ottmovie.in என்ற இணையதளத்திலும் தீபாவளியன்று ‘பச்சை விளக்கு’ படத்தை ரிலீஸ் செய்கிறோம்.” என்றார்.

‛மாயா’, ‘மாநகரம்’, ’மான்ஸ்டர்’, ‘டாணாக்காரன்’, ’இறுகப்பற்று’, ’பிளாக்’ என தொடர்ச்சியாக 6 வெற்றிப்படங்களுக்குப் பிறகு, பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் 7-வது திரைப்படத்தில் கதையின் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்...
முன்னணி ஓடிடி தளமான ஜீ5 தளத்தின் புதிய திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’...
ஸ்வர்க்கசித்ரா அப்பச்சன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் விஜய்-சூர்யா இணைந்து நடித்து 2001ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் 24 ஆண்டுகளுக்கு பின்னர் 4K தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் 21ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் B...